Friday 21 December 2018

அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும்


   அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும் என்ற தலைப்பு பலரையும் அதிர்ச்சிக்குளாயிருக்கலாம். ஆனால் நமது தமிழ் மொழியின் நிலைமை இப்படி தான் உள்ளது. ஆங்கில மொழி வந்த பிறகு, அதனின் தாக்கம் உலகம் முழுவதும் ஊடுருவி, ஆங்கில மொழி உலக பொது மொழியாக்கி பிறகு இதுவரை 247 மொழிகள் அழிந்து இருக்கின்றன.


   ஆங்கில மொழி அத்தனை சக்தி படைத்ததா இருக்கு. தமிழ் மொழியும் இப்படி அழிவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக ஆய்வுகளில் கூறுகின்றன. உதாரணமா, ஒரு நாளைக்கு நாம் பேசும் தமிழ் மொழியில் நமக்கே தெரியாமல் எத்தனை ஆங்கில சொற்கள் தமிழோடு கலந்து பேசுகிறோம் என்று தெரியுமா?. இப்படி தான் ஒவ்வொரு மொழியிலும் ஆங்கிலம் ஊடுருவி இருக்கு. இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையா ஆங்கிலம் ஊடுருவிடும். காரணம் இன்றைய தமிழர்கள் ஆங்கில மோகத்தில் தான் இருக்கிறார்கள். தமிழர்கள் தமிழ் மொழி மீது அக்கறை காட்டுவது இல்லை. தங்கள் குழந்தைகளை கூட ஆங்கில வழி கல்வியில் தான் சேர்க்கின்றனர். ஆங்கிலத்தில் பேசுவதை தான் பெருமையாகவும் கருதுகிறார்கள்.


   இந்த நிலை நீடித்தால் இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம் தமிழில் ஊடுருவிடும். கடந்த ஆண்டு அலாஸ்கா மாநிலத்தில் மரியாஷ்மித் ஜோநோஸ் என்ற பெண்மணி இறந்தார். அவர் இறக்கும் போது ஒரு மொழியையும் தன்னுடனே எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளின் ஒன்றான EYAK என்கின்ற மொழியை பேச தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும் தான் இருந்தார். அவர் இறந்த பிறகு இன்று இந்த உலகத்தில் யாருக்குமே EYAK மொழியை பேச தெரியாது. அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்துவிட்டது. மரியாஷ்மித்க்கு மொத்தம் 9 வாரிசுகள் இருக்கிறார்கள் இருந்தாலும் யாருமே EYAK மொழியை கற்றுக்கொள்ள வில்லை. நம்மை போலவே, இவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும், நாகரிகம் என்ற கருத்தோடு இருந்து விட்டனர்.


   அவர்களின் பாரம்பரிய மொழியை கற்க வில்லை. அதனால் அந்த மொழி அழிந்துவிட்டது. உலகின் பெரும்பாலான மொழிகள் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை உலகின் ஏதோவொரு மூலையில் அழிந்து வருவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிகின்றனர். அதில் தமிழ் மொழியும் அடங்கியுள்ளது என்று கூறியுள்ளனர். ஒரு மொழி அழிவதற்கான அனைத்து காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுள்ளது என்பது அபாயகரமான செய்தி.


   இன்றைய தலைமுறையினரும் தமிழை படிக்கவோ, எழுதவோ ஆர்வம் காட்டுவது இல்லை. தற்போது எல்லாம் ஆங்கில மோகத்தில் தான் இருக்கிறார்கள். என்று அறிக்கையில் கூறியுள்ளனர். ஒரு இனத்தை அளிக்க வேண்டும் என்றால், அவர்கள் பேசுகின்ற மொழியை அளித்து விடுங்கள். அந்த இனம் தானாகவே அழிந்துவிடும் என்கின்றனர். தமிழில் பேசுவதும், எழுதுவதும், சிந்திப்பதும், தமிழ் மொழியை அழிவில் இருந்து காப்பாற்றும்.


    இல்லையென்றால், மனித இனம் முதன் முதலில் பேசிய இந்த தமிழ் மொழி அடுத்த 100 வருடங்களில் முற்றிலுமாக அழிந்துவிடும் என்கிறார்கள். இந்த மொழியை காப்பாற்றுவது, நம் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு தமிழை போற்றுதலுக்கான கற்று தருகிறோம் என்பதில் தான் இருக்கிறது.

1 comment:

  1. அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷

    ReplyDelete