Saturday 16 May 2020

செஞ்சி கோட்டை வரலாறு

     விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மாநில தலைநகரான சென்னையில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது இந்தியாவில் உள்ள எவரும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாத கோட்டைகளில் மிக சிறந்தது என்பார் மராட்டிய மன்னர் சிவாஜி. பிரிடிஷ் ஆட்சியாளர்கள் இதனை, கிழக்கின் ட்ராய் என்றனர். சோழர்களால் சிங்கவர நாடு என்றும், 1614ல் வாழ்ந்த கிண்ட் என்பவர் ஐரோப்பாவில் உள்ள ஆன்ஷ்ற்றான் மலை போல் உள்ளது என்பார். 

     விஜய நகர ஹிந்து அரசர்கள், நாயக்க மன்னர்கள், பீஜப்பூரின் முஸ்லிம் அரசர்கள், 1750ல் பிரஞ்சு காரர்களும் செஞ்சியை ஆட்சி செய்து இருந்தாலும். 1714 ஜனவரி முதல் 1714 அக்டோபர் வரை, வெறும் பத்து மாதங்கள் ஆட்சி செய்த தேசிங்கு ராஜா புகழ் மட்டும் இன்றும் பரவியுள்ளது ஆச்சரியம் தான். 14ம் நூற்றாண்டின் இறுதியில், பெரிய தீபகற்ப நகரங்களில் ஒன்றாக செஞ்சி உள்ளது. காஞ்சிபுரத்தை போன்று செஞ்சியும் இரு பெரும் பிரிவாக பிரிந்துள்ளது. தற்போதைய செஞ்சி, சிவ செஞ்சி என்றும், சிங்கபுரம் மேலச்சேரி இணைந்திருந்த பகுதியை விஷ்ணு செஞ்சி என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. 
     ஆரம்பத்தில் செஞ்சி கோட்டையை கட்டியது. செஞ்சியர் கோன் காடவ மன்னன் கட்டியதாகவும். இடையர் குலத்தை சார்ந்த அனந்த கோன் கட்டியதாகவும் இரு வேறு கருத்துகள் உள்ளன. செஞ்சியின் இரண்டு நூற்றாண்டு வரலாற்றை கூறும் மெக்கல் சீ சுவடி தொகுப்புகளில், இது தொடர்பான பல தகவல்கள் உள்ளன. இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், அணைகள், படை வீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் எளிதில் கடக்கமுடியாத ஆழமான மற்றும் அகலமான அகழிகள் போன்றவை தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டிட கலையில் இருந்த ஆர்வத்தை வெளிபடுத்துகிறது. 

     செஞ்சி பல போர்களை சந்தித்த பிறகும், இன்னும் கம்பிரமாக காட்சியளிகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி என்றும் சிங்கபுரி கூட்டம் என்றும் அழைக்கப்பட்டது. அதுவே, பின்னாளில் செஞ்சியாகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது. தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு முக்கியமான ஒரு இடம் உண்டு. மேற்கு தமிழகத்தில், வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். வேலூர் கோட்டைகள் கட்டுவதற்கு முன்னரே,  கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.
     சிங்கவரம்: செஞ்சியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்தில் சிங்கவர நாட்டின்தலைநகராக இருந்தது. முதலாம்மகேந்திர வர்மனின் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்தில் இந்த நகரம் ஏற்பட்டு இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இங்குள்ள அரங்கநாத சுவாமி கோவில் மிக பழமையானது. இது செஞ்சிக்கு வடக்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல 125 படிகளை கடந்து செல்ல வேண்டும். எல்லோரா போல் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்டது இந்த கோவில். இங்குள்ள பெருமாளின் திருமேனியை ஒரே கல்லில் குடைந்து வடிவமைத்துள்ளனர். 

     அரங்கநாதர் கோவிலுக்கு செஞ்சி அரச குடும்பத்தினர் வருவதற்காக, செஞ்சி கோட்டையில் இருந்து இக்கோவிலுக்கு சுரங்கம் ஒன்றும் உள்ளது. சில படையெடுப்பின் போது, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ மூர்த்தியை சிறுது காலம், தேசிங்கு ராஜா பாதுகாப்பில், சிங்கவரம் ரெங்கநாத ஆலயத்தில் வைத்திருந்தனர். பின்னர் காஞ்சியில் அமைதி திரும்பியதும், மீண்டும் எடுத்து செல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. செஞ்சியின் அடுத்த சிறப்பு மண்டக பட்டு, இங்குள்ள குடவயர் கோவில் மிக பழமையானது. செஞ்சியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனால் கட்டப்பட்ட முதல் குகை கோவில் இது தான். 

     தளவானூர்: செஞ்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் உள்ளது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மல்லேஷ்வர் கோவில் இங்கு தான் உள்ளது. இது மட்டுமின்றி செஞ்சியை சுற்றிலும், பழமையான புனித திருத்தலங்கள் உள்ளன. அதன் வரிசையில் செஞ்சியில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில், அனந்தபுரம் மலை மீது சிவன் கோவில் அமைந்துள்ளது. மாமல்லபுரத்து கடற்கரை கோவிலையும், காஞ்சி கைலாசநாதர் கோவிலையும் கட்டிய பல்லவ மாமன்னன் ராஜ சிம்மனால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. சமணர்களின் முக்கியத்துவம் வாய்ந்த 24 தீர்தங்காரர்களின் படைப்பு சிற்பம், மிகப்பெரிய கூம்பு வடிவ பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 24 தீர்தங்காரர்களுக்கும் சிலைகள் இருப்பது இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாத அற்புத காட்சி. 

     செஞ்சியின் சிங்கபுரத்துக்கு மேற்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழமையான கிராமம் மேலச்சேரி. அக்காலத்தில் செஞ்சி நகரம் இவ்வூர் வரை பரவி இருந்தது. ஆகவே இதற்கு பழைய செஞ்சி என்ற மற்றொரு பெயரும்உண்டு. இவ்வூருக்கு வடக்கே உள்ள சிறிய குன்றின் மேல் முருகன் கோவில் ஒன்றும் உள்ளது. மேலும் புகழ்வாய்ந்த பாஞ்சாளியம்மன் கோவிலும் உள்ளது. இந்த மலையில், கொல்லி மலையில் கிடைக்காத பல அறியமூலிகைகள் கிடைப்பதாகவும் சொல்லபடுகிறது.

No comments:

Post a Comment