Tuesday 20 October 2020

சூடு குறைய - சோற்று கற்றாழை

     சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இரு பக்கமும் முள் போன்ற சொரசொரப்பான ஓரங்களை கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியை பெருக்கும்.

     தோல் நீக்கிய சோற்றுக்கற்றாழையை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெடிப்பு அகன்று தகந்தணியும். மலசிக்கல் போகும். தோல் நீக்கிய சோறு, கசப்பில்லா வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்பு வகை கூல் மூல நோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின் சாறு பயன்படுகிறது. இதன் ஜெல் நமது தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும்.

     மேலும் முக அழகு சாதனமாகவும் பயன்படுகிறது. இலையை ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் மாற்றம் சளி தொல்லை நீங்கும். வயிற்றில் உள்ள நாக்கு பூட்சியை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்கு போட்டால் முடி வளரும், நிறமும் கருமையடையும்.

 ஜெல்லை பதப்படுத்தி குளிர் பானமாகவும் பயன் படுத்தப்படுகிறது. வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்தி பொடி செய்து, 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நோய்கள் தீரும். ஆண்மை நீடிக்கும்.

No comments:

Post a Comment