Monday 16 March 2020

உலகின் நுரையீரல் மீது விழுந்த ஓட்டை

    நாம் வாழும் பூமியில் பிராண வாயுவான ஆக்சிஜன் 21% நிரம்பியுள்ளது. இங்கு வாழும் 700 கோடி மனிதர்கள் உட்பட அனைத்து நிலவாழ் விலங்குகளும் உயிர் வாழ இந்த 21% ஆக்சிஜனையே   சார்ந்துள்ளது. ஒரு நாளில் சராசரியாக நாம் ஒவ்வொருவரும் 550 லிட்டர் ஆக்சிஜனை பயன்படுத்துகிறோம். மொத்த விலங்குகள் பயன்படுத்தியும் நம் வளிமண்டலத்தில் பற்றாக்குறை இற்படாமல் இருக்க காரணம் தான். குறிப்பாக மழைக்காடுகள், நாம் பெருமளவில் உற்பத்தி செய்யும் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. மேலும் மலை பொலிவிற்கு முக்கிய காரணம் இந்த மழைக்காடுகளே ஆகும். உலகின் மிகப்பெரிய மலை காடுகளான அமேசான் காடுகள் பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. இவை பெருமளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிழுத்து, ஆக்சிஜனை உற்பத்தி செய்வதால் இவ்வாறு அழைக்கப்பட காரணம்.

 அமேசான் காடுகள் தென்னமெரிக்க கண்டத்தில் காணப்படுகின்றன. இவற்றின் பெரும் பகுதி பிரேசிலில் அமைந்தாலும், பெரு, கொலம்பியா, ஈக்வடார் போன்ற பல நாடுகளில்  பரவியுள்ளது. பரப்பளவில் நம்  போல் ஒன்றரை மடங்கு பெரியது. உலகின் இரண்டாவது நீளமான அமேசான் நதி இதன் உயிர் நாடி, இதன் படுக்கையில் அமைந்துள்ளதால் இதற்கு அமேசான் என்று பெயர் ஏற்பட்டது. அமேசான் காடுகளின் வயது சுமார் 4 கோடி ஆண்டுகளுக்கும் மேல். உலகின் ஒட்டு மொத்த ஆக்சிஜன் உற்பத்தியில் 20%  இவை மட்டுமே உற்பத்தி செய்கிறது. அமேசான் காடுகள் மிக அடர்த்தியாக காணப்படுவதால், இவற்றின் உட்புறம் இருட்டாகவே  இருக்கும். இவை எந்த அளவு அடர்த்தி என்றால், இவற்றின் மேல் பகுதியில் விழும் மழைத்துளிகள் தரையை அடைய 10 நிமிடங்கள் ஆகும்.
    அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய பல்லுயிர்சூழல் அமைப்பு ஆகும். அமேசானில் மட்டும் 40,000 தாவர இனங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. மேலும் 1,300 பறவை இனங்கள் (உலகில் 5 ல் ஒரு பறவை வகை இங்கு வசிக்கிறது). 3,000 மீன் வகைகள், 430 பாலூட்டி வகைகள் மற்றும் 2.5 மில்லியன் பூச்சி வகைகளும் காணப்படுகின்றன. இங்கு மட்டும் 400 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசிக்கின்றனர். இவற்றில் 50க்கும் மேற்பட்டவர்கள் வெளி உலகத்தை பற்றி அறியாதவர்கள். அமேசானில் கொடிய ஜந்துக்களான அனகோண்டா, விஷ தவளைகள், மின்சாரம் பாய்ச்சும் ஈல் மீன்கள் மற்றும் சதை உண்ணும் பிராணா மீன்கள் வசிக்கின்றன. 

   இவ்வளவு வகை உயிரினங்களை கொண்டு ஒரு தனி சாம்ராஜ்யமாக திகழும் உலகின் நுரையீரலில் மனிதர்களால் ஓட்டை ஏற்பட்டுள்ளது. காடுகள் அழிப்பு வேகம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. விவசாயத்திற்காகவும், நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், அணைக்கட்டுகள் போன்ற காரணங்களுக்காகவும், சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகவும் அமேசானின் மலைக் காடுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 20% அமேசான் முற்றிலும் அழிக்க பட்டுவிட்டது. 
    உலக வெப்ப மயமாதலுக்கு காடுகள் அழிப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளது. பிரேசில் அமேசானில் ஒரு பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. இதன் பிறகு காடுகள் அழிப்பு சற்று குறைந்துள்ளது. ஆனால் அங்கு ஏற்படும் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ப, ஆட்சியாளர்களின் கொள்கைகளும் மாறிவருகின்றது. மனிதர்கள் காடுகளின் முக்கியத்துவத்தை உணரும் வரை மாற்றம் நிகழாது, 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான இயற்கையின் குழந்தை 40,000 ஆண்டுகளுக்கு முன் உருவான மனித இனத்தின் மாற்றத்திற்காக காத்திருக்கிறது.

No comments:

Post a Comment