Thursday 12 March 2020

பச்சை மையில் யார் கையெழுத்து இட முடியும் தெரியுமா ?



   உள்ளூரில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோர் பல கோப்புகளில் கையெழுத்து இடுகின்றனர். சிபாரிசு கடித்தங்கள், பரிந்துரை கடிதங்கள் என அனைத்திற்கும் பச்சை மையில் கையெழுத்து இட்டு அனுப்புவதை பார்த்து இருப்பீர்கள். தலைவர்களில் தொடங்கி வார்டு உறுப்பினர்கள் வரை, தங்கள் பாக்கெட்டில் பச்சை மை பேனாவை வைத்து கொள்வது ஒரு தனி மரியாதையாக நினைத்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? இதற்கு எதாவது அரசாணை உள்ளதா ?

   இதை, இதுவரை யாரும் ஏன் என்று கேட்கவில்லை. கேள்வி கேட்க ஆள் இல்லாததால் இதை யாரும் கண்டுக்கொள்ளவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. ஆனால் இப்போது ஜாபர் சாதிக் என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த தகவலை கேட்டு பெற்றுள்ளார். 

 இதற்கு கிடைத்த பதில் என்ன தெரியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பச்சை மையில் கையெழுத்து இடும் அதிகாரம் பெற்றுள்ளார்கள். 

 உள்ளாட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கபடுகின்ற தலைவர்களுக்கோ, மாவட்ட, ஒன்றிய, வார்டு உறுப்பினர்களுக்கோ, அவ்வளவு ஏன் சட்டமன்ற உறுப்பினருக்கே பச்சை மையில் கையெழுத்து இடும் அதிகாரம் இல்லையாம்.

No comments:

Post a Comment