சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நலவாழ்வு முறைக்கு ஏற்ப வாழ்க்கை முறையில் மாற்றத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டும்.
வயது வித்தியாசம் இல்லாமல், உணவு முறையில் மாற்றம் ஊட்டச்சத்துணவின் முக்கியத்துவம், உடல் திறனை அதிகரிக்கும் செயல்பாடுகள், எடைக் குறைப்பில் கவனம் செலுத்துதல் போன்றவற்றில் ஈடுபாட்டால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பை அறுபது சதவீதம் வரை தடுத்துவிடலாம்.
மாமிச உணவுகளைவிட இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்களில் கொழுப்பு குறைவு, மற்றம் சத்துகள் அதிகம். எனவே, இயற்க்கை உணவுக்குத் திரும்ப வேண்டும்.
தொடர்ந்து உடற்பயிர்ச்சியில் ஈடுபட வேண்டும். நடப்பது நல்லது மோட்டார் சைக்கிளில் செல்வதை விட சைக்கிளில் செல்வது உடல் திறனை அதிகரிக்கும். ஏரோபிக் பயிற்சிகள், இசைக்கு ஏற்ற நடனம் போன்றவற்றில் ஈடுபடலாம்.
உடல் எடையை அதிகரிக்கவிடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால், நம்மை நோக்கி சர்க்கரை நோய் வராமல் தடுத்துவிடலாம்.
மேலும், முப்பது முதல் நாற்பது வயதாகிவிட்டாலே, ஆண்டுக்கு ஒருமுறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால்.
- நீங்கள் அதிக எடையுடன் இருந்தால்.
- எவ்வளவு சாபிட்டாலும் காரணமே இல்லாமல் எடை குறைந்தால்.
- உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால்.
- காரணமே இல்லாமல் அலர்ஜி மலசிக்கல் இருந்தால்.
- மன இறுக்கம்.
- அதிகப் பசி.
- மிகுதியான தாகம்.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
- காயங்கள் ஆறாத நிலை.
போன்றவை இருந்தால், உடனடியாகத் தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி, சிறுநீர்ப் பரிசோதனை அல்லது ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
உணவு சாப்பிட்டு ஒன்றை மணி முதல் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்வது தான் சரியான முறை. முதலில் வெளியாகும் சிறுநீரை கழித்துவிட்டு, இரண்டாவது முறை கழிக்கும் சிறுநீரை ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்துப் பரிசோதிக்க வேண்டும்.
மருந்துக் கடைகளில் டயஷ்டிக்ஸ் என்ற பெயரிலோ அல்லது டெஸ்ட் டேப் சுகர் இன் யூரின் என்ற பெயரிலோ கிடைக்கும் பரிசோதனை கிட்டுகளை வாங்கிப் பயன்படுத்தி, சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மருந்துக் கடைகளில் பெனடிக்ட் சொல்யுஷன் என்ற கேட்டு வாங்கி, அதில் ஐந்து மில்லி எடுத்து ஒரு சோதனைக் குழாயில் போட்டு ஸ்பிரிட் விளக்கு வெப்பத்தில் கொதிக்கவையுங்கள். பெனடிக்ட் சொல்யூஷன் நிறம் மாறாமல் இருக்க வேண்டும்.
இரண்டாவது முறையாக எடுத்த சிறுநீரில் இருந்து ஒரு சொட்டு விட்டு மறுபடியும் கொதிக்க வையுங்கள். இப்போது நிறத்தைப் பாருங்கள். நிறம் மாறாமல் நீல நிறத்தில் இருந்தால், உங்களுக்கு சர்க்கரை நோய் இல்லை. மஞ்சள் நிறத்தில் இருந்தால், இரண்டு சதவீதம் வரை சர்க்கரை நோய் உள்ளது என்பதையும், ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், சர்க்கரை நோய் இருப்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளலாம். வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்ட பிறகு சிறுநீர்ப் பரிசோதனை செய்ய வேண்டாம். இதனால், சிறுநீரில் தவறான முடிவுகள் தெரியலாம்.
ஆண்டுக்கு ஒருமுறை கண், இதயம், பொது உடல் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தால், அறுவைசிகிச்சை முன்பும், பின்பும் சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
உங்கள் கை கால்களில் புண்கள் மற்றும் காயங்கள் ஏற்படாமலும், ஒருவேளை ஏற்பட்டால் அவை விரைந்து ஆருகின்றனவா என்பதையும், அளவுக்கு மீறிய களைப்பு ஏற்படுவதாக இருந்தா, இதயப் பரிசோதனையையும் செய்து கொள்ளுங்கள்.