Friday 22 May 2015

சுவாசம் நின்றுபோனால்


           விபத்து, சுவாசக் குழாயில் அடைப்பு, வியாதி முதலியவற்றால் ஒரு மனிதரின் சுவாசம் நின்றுவிடக்கூடும். அப்போது அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். மருத்துவமனை சிறிது தொலைவில் இருந்தாலோ, மருத்துவ உதவி கிடைப்பதற்குச் சிறிது தாமதமானாலோ, அவரது உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு சில முதலுதவி சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அவை என்னவென்று எப்போது பார்ப்போம்.

முதலுதவி

  1. பாதிக்கப்பட்டவரை தரையில் நேராகப் படுக்க வைக்கவும்.
  2. அவரது நெற்றியில் ஒரு கையை வைத்து, தாடையில் இரு விரல்களால் அவர் தலையை மேலும், கீழும் அசைக்கவும்.
  3. அவரது நாக்கு புரண்டு அவர் சுவாசக் குழாயை அடைத்துக் கொண்டிருந்தால் இப்போது சரியாகிவிடும்.
  4. அவரது சுவாசக் காற்று வெளியே வருவதைக் கவனிக்கவும். அவர் மார்பு ஏறி இறங்குகிறதா என்று பார்க்கவும்.
  5. அவர் மூக்கை விரல்களால் மூடிக்கொண்டு அவரது வாயின் மீது உங்கள் வாயை வைத்துக் காற்றறை கூதவும்.
  6. அவரது கழுத்திலுள்ள குரல்வளை முடிச்சின் மீது உங்கள் இரு விரல்களை வைத்து கரோடிட் நாடி துடிக்கிரதாவென்று பார்க்கவும்.
  7. அவரது சுவாசம் சீரானால் கூட மருத்துவ உதவி வரும்வரை அவரைப் படுத்த நிலையிலேயே வைத்திருக்கவும், எழுந்திருக்க அனுமதிக்கக் கூடாது.
  8. குழந்தை என்றால் முதலில் கூடியவாறே எல்லாம் செய்ய வேண்டும். ஆனால், முக்கை அடைத்துக் கொண்டு வாயில் ஊதக்கூடாது. மாறாக, குழந்தையின் மூக்கையும், வாயையும் நமது வாயினால் மூடிக்கொண்டு காற்றை ஊத வேண்டும்.
  9. கழுத்து உடைந்த மனிதன் என்றால் அவரது தலையின் இருபுறமும் கைகளால் பிடித்து அவர் தலையை நேராக் வைக்க வேண்டும்.
  10. அவரது கீழ்த்தாடையை நமது சுட்டுவிரலால் முன்பக்கம் நகர்த்த வேண்டும். அவரது வாயின் மீது நமது கன்னத்தை வைத்து அவர் மூக்கினுள் காற்றை ஊத வேண்டும்.

No comments:

Post a Comment