Saturday 6 June 2015

எத்தனால் கார்கள்

        பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகும் நிலையில், பெட்ரோலுக்கு மாறாக எத்தனால் தான் சிறந்த எரிபொருள் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவாக்கி வருகிறது. எத்தனால் கரும்புச் சாற்றில் இருந்து எடுக்கப்படுகிறது பிரேசில் கரும்பு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு.

      அதனால் பெட்ரோல் கார்களைவிட எத்தனால் கார்களை வாங்கினால் வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடை குறைக்க முடியும் என்று பிரேசில் அரசு முடிவு செய்தது. அதற்காக 1980-களில் எத்தனால் எரிவாயு உபயோகம் என்ற ஒரு பெரிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தது. அப்போது விற்பணையான கார்களில் 75 சதவீத கார்கள் இங்கு எத்தநாளில் தான் ஓடின.


     கரும்பு உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதால் எத்தனால் உற்பத்தி எப்போதும் பாதிக்காது என்று தப்புக் கணக்கு போட்டது, பிரேசில், அனால் திடீரென்று உலக அளவில் சர்க்கரை விலை ஏகத்துக்கு எகிறியது. சர்க்கரை விலை உயர்ந்ததால் கரும்பு விவசாயிகள் கரும்பை எத்தனாளுக்குப் பதில் அதிக விலைக்கு வாங்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கினர். இதனால் உள்நாட்டில் கரும்பு பற்றாகுறை ஏற்பட்டு எத்தனால் உற்பத்தி குறைந்தது.

   இந்த நேரத்தில் பெட்ரோல் விளையும் குறைந்தது. பற்றாகுறை ஏற்பட்டதால் எத்தனால் உயர்ந்தது. இதனால் மக்கள் எத்தனால் கார் வாங்குவதற்குப் பதில் மீண்டும் பெட்ரோல் கார்களை வாங்கத் தொடங்கினார்கள். 1990-களில் எத்தனால் கார்களின் எண்ணிக்கை மடமடவென குறைந்தது. இறுதியில் எத்தனால் கார் உற்பத்தி நின்று போனது.

       ஆனால் பெட்ரோல் இறக்குமதி அதிகரித்து, பிரேசிலின் வெளிநாட்டுக் கடன் அதிகமானது. இதனால், மீண்டும் ஏத்தனால் முறைக்கு பிரேசில் திரும்பியுள்ளது. ஆனால் கடந்த நடவாடிக்கைகளை எடுத்துவைத்துள்ளது. இம்முறை திட்டம் தங்குதடையின்றி வெற்றிகரமாக செயல்படும் என்கிறது, பிரேசில்.

No comments:

Post a Comment