Thursday 4 June 2015

ஏழைகளின் வங்கி


    நதிகளின் நாடாகக் கருதப்படும் வங்க தேசம், நீர்வளம் நிறைந்தது. ஆனாலும் ஏழை நாடாகவே தொடர்கிறது.

  இந்நாட்டின் வறுமைநிலையைப் போக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 'ஏழைகளின் வங்கி' என்று அழைக்கப்படும் டாக்கா கிராமிய வங்கியின் பங்கு மிக முக்கியமானது.

       பெண்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு பருகிறது இவ்வங்கி.

          டாக்கா கிராமிய வங்கியின் செயபாடுகளைப் பாராட்டும்விதமாக 2006-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு இவ்வங்கிக்கும், இதன் நிறுவனரான டாக்டர் யூனுஸுக்கும் வழங்கப்பட்டது.

      இந்த வங்கியின் மொத்த உறுப்பினர்களில் 97 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment