Thursday 4 June 2015

பூமி வாழ கரப்பான் பூச்சிகள் வேண்டும்



   கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே இல்லத்தரசிகள் பலரும் அலறியோடுவர்கள். ஆனால் பூமி என்றென்றும் ஜீவித்திருக்க, இந்த சிறு பூச்சிகள் அவசியம் என்கின்றார் ஒரு விஞ்ஞானி. பூமியின் சுற்றுச் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் கரப்பான் பூச்சிகளின் பங்கு முக்கியமானது என்கிறார் இவர்.

     ஸ்ரீனி கம்பம்படி என்ற அந்த இந்திய வம்சாவளி ஆய்வாளர், அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக உயிரியல் துறைப் பேராசிரியர். அவர், உலகின் 5 ஆயிரம் முதல் 1௦ ஆயிரம் வகையான கரப்பான் பூச்சி இனங்கள் திடீரென மறைந்திருப்பது கவலைக்குரியது என்று வருத்தப்படுகிறார்.

         "பெரும்பாலான பரப்பான் பூச்சிகள் அழுகும் கழிவுப்பொருட்களைச் சாப்பிடுகின்றன. பின்னர் தாங்கள் வெளியேற்றும் கழிவின் மூலம் பூமிக்கு நைட்ரஜனை செலுத்துகின்றன. அந்த நைட்ரஜனை தாவரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன" என்று விளக்கம் அளிக்கிறார் ஸ்ரீனி.

எனவே இனிமேல் நாம் கரப்பான் பூச்சிகளைப் பார்த்து முகம் சுளிக்காமல் இருப்போம்!

No comments:

Post a Comment