Tuesday 30 June 2015

பூச்சிக் கொல்லி பாதிப்புகள்


உலகம் முழுவதும் 3௦ லட்சம் பேர் பூச்சிக் கொல்லி மருந்துகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் 2௦ ஆயிரம் பேர் இறந்துள்ளதாகவும் 1990-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. 1994-ம் ஆண்டில் இதனால் 20 லட்சம் முதல் 5௦ லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், 4௦ ஆயிரம் பேர் இறப்பு என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆசிய பசிபிக் அளவிலான பூச்சிக் கொல்லி எதிர்ப்பு நடவடிக்கை குழு பூச்சிக் கொல்லி விஷத்தால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் கொல்லப்படுவதாகவும் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் படுவதாகவும் தெரிவிக்கிறது.

மற்ற நாடுகளில் தடை செய்யப்பட மிக மிக மோசமான பூச்சிகொல்லிகள் கூட இந்தியாவில் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் தாய்ப்பாலில், மனித உடல் கொழுப்பில், ரத்தத்தில்  கலந்துள்ள பூச்சிக் கொல்லிகளின் அளவு மதிப்பீடு செய்யப்பட்டு. இந்தியர்கள் உடலில்தான் உலகிலேயே அதிக அளவு ஆர்கனோ குளோரின் வகை பூச்சிக் கொல்லிகள் உள்ளன என நிருபிக்கப் பட்டுள்ளது.

மீதொமைல் தெளிப்பில் பங்கேற்ற ஆண்களால் உருவாகும் கருவில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டன. கருக்கள் எளிதில் களைவது, இறந்து பிறப்பது, குழந்தை இறப்பது என அதிகமாக இருந்தது. தலைவலி வந்தி, மயக்கம், சுவாசிப்பதில் சிரமம், பார்வை தெளிவின்மை, புற்றுநோய், இனப்பெருக்க கோளாறு, நரம்பு பதிப்புகள், நோய் எதிர்ப்புக் குறைவு போன்ற பாதிப்புகளும், இறப்பும் பூசிகொல்லியால் ஏற்படுகிறது.

குறிப்பாக பெண்களின் கறுவுதல், மகப்பேறு பிரச்சினைகளுக்கும், பூச்சி கொள்ளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இது தவிர ஆஸ்துமா, ஒவ்வாமை, இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட உணவுபொருட்களால் ஏற்படுகின்றன. நமது நாட்டில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஆர்கனோ பாஸ்பரஸ் பூச்சிகொல்லியால், மத்திய நரம்பு மண்டலம் அதிகம் பாதிக்கப்படுகிறதாம். பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிகொல்லியால் மனிதனுக்கு ஏற்படும் பதிப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போனாலும் கூட ஆபத்தான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.

No comments:

Post a Comment