Wednesday 3 June 2015

வியக்க வைக்கும் மலைகள்

            மலை என்பதற்கு எலோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வரைவிலக்கணம் எதுவும் கிடையாது. உயரம், கனவளவு, சரிவு, இடைவெளி, தொடர்ச்சி என்பன 'மலை' என்பதை வரையருப்பதர்க்கான அடிப்படைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிரம்மிப்பூட்டதக்கதாக அல்லது குறித்து சொல்லத்தக்க உயரத்துக்கு உடையனவற்றை மலை என்று கூறுகிறோம். அடிவாரத்தில் இருந்து குறைந்தது 15௦௦ மீட்டர் உடையவையாக இருக்கும். மலைகளை பற்றி வியந்து கூறிக் கொண்டே போகலாம்.

உலகின் மலைகள்
       உலகின் மொத்தம் 24 சதவீதம் நிலப்பரப்பு மலிகள்ளல் ஆனது. ஆசியாவின் 64 சதவீதம் நிலப்பரப்பும், ஐரோப்பாவின் 25 சதவீதம் நிலப்பரப்பும், தென் அமெரிக்காவின் 22 சதவீதம் நிலப்பரப்பும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் 17 சதவீதம் நிலப்பரப்பும் மலைகளால் ஆனது. உலகின் பெரும்பாலான ஆறுகள் மலைகளில் இருந்து உருவாகிறது. உலக மக்களில் பெரும்பாலும் நீருக்காக மலைபகுதிகளில் தங்கியுள்ளனர். மலைகளை நிலப்பன்பியலின் அடிப்படியில் மூன்று வகையாக பிரிக்கலாம். அவைகள் எரிமலைம், மடிப்பு, பகுதி என்பனவாகும்.

எரிமலைகள்
       பூமிக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகளின் அழுத்ததால் வெப்ப நிலை உயர்ந்து எரிமலைகள் உருவாகின்றன. பூமிக்கடியில் ஏற்படும் உயரழுத்த வெப்ப நிலையானது அருகில் இருக்கும் பாறைகளை உருக்கி திரவம் போன்றதாக்கிவிடும்.திரவ நிலையில் உள்ள பாறை குழம்பானது தனது உஷ்ணத்தால் மேல் எழுந்து பூமியின் மேற்பரப்பை அடைந்த பாறை குழம்பானது அப்படியே படிந்து எரி மலையாகிவிடும். ஜப்பானில் இருக்கும் பெரும்பாலான எரிமலைகள் இப்படி உருவானதே ஆகும்.

மடிப்பு மலைகள்
           மடிப்பு மலையானது பூமிக்கு மேலிருக்கும் பாறை அடுக்குகள் ஒன்றோடு ஓன்று உராய்ந்து பாறைகள் மடிவதினால் உருவாகின்றன. பெரும் வெடிப்புகளில் இருந்து உருவாகிய பூமியின் மேற்பரப்பில் எடை குறைந்து காணப்பட்ட பெரும் பாறைகளால் ஆனது ஒரு கட்டத்தில் அசையா நிலங்களா கண்டங்களை நோக்கி நகர ஆரம்பித்து. பின்னர் உந்து விசையினால் தள்ளப்பட்ட பாறைகள் சேர்ந்து மடிப்பு மலைகள் உருவானது.

பகுதி மலைகள்
    பூமியின் மேலடுக்கில் பாறைகள் ஒன்றோடு ஓன்று உராய்ந்து மேல் எழுகின்றது. பூமிக்கடியில் ஏற்படும் வெப்ப அழுத்தத்தின் காரணமாக அவ்வப்போது ஏற்படும் பாறைகளின் நகர்வினால ஏற்கனவே இருக்கும் மலைகளில் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. ஒரு பாறை நகர்வதினால் மற்ற பாறைகளும் நகர்ந்து மலைத்தொடர்கள் இடை இடையே ஏற்படுகிறது. மேலும் ஏராளமான மலை அடுக்குகள் உருவாக காரணமாகின்றது. இவ்வாறாக மலைத்தொடர்கள் உலகம் முழுவதும் பரந்து கிடக்கிறது.

No comments:

Post a Comment