Monday 8 June 2015

பயமுறுத்தும் பரிசோதனைகள்


        புதிதாக ஒரு மருந்தை கண்டுபிடித்து, அந்த மருந்து சந்தையை வந்தடைய கிட்டத்தட்ட 3,6௦௦ கோடி ரூபாய் வரை செலவாகிறது. இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம். மனிதர்கள் மீதே சோதனை.

      வளர்ந்த நாடுகளில் மனிதர்கள் மீது எந்த பரிசோதனை செய்ய கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு. தவிர நோயாளிகளின் பாதுகாப்புக்கான செலவும் அதிகம். மூன்றாம் நாடுகளில் இந்த சோதனை நடத்தும் போது செலவில் 6௦ சதவீதம் வரை குறையும்.

    ஏழைமக்களின் அறியாமை, எளிதில் வளையக் கூடிய சட்ட திட்டங்கள், அரசின் கண்கானிபின்மை ஆகியவற்றின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்த பரிசோதனைகளை நடத்த ஆரமிபித்தன, மருந்து கம்பெனிகள்.

  இந்தியாவில் போட்டி போட்டுத் தொடங்கப்படும் உயிர்த்தொழில் நுட்பவியல் பூங்காக்கள் தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சாவி. 2௦௦5-ல் இது போன்று 1௦௦ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இப்போது ஆயிரம் பரிசோதனைகளுக்கு மேல் நடக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட பரிசோதனைகளால் இறந்தவர்கள் 132 பேர். இப்போது 67௦ பேர்.

   இந்த பரிசோதனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும், அறியாமையையும் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றியே செய்யப்படுகின்றன. இது தொடர்பான விதிகள் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம், நோயாளிக்கு நோயாளி மாறுபடுகிறது. இதுதான் மருந்து கம்பெனிகளுக்கு சாதமாக மாறுகிறது.

   ஆந்திராவில் கம்மம் மாவட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோய் எதிர்ப்பு மருந்து பரிசோதனையில் 14 ஆயிரம் சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த பெண்களுக்கோ, அவர்களின் பெற்றோருக்கோ தெரியாது. இந்த சிறுமிகளில் 6 பேர் உரியிலந்ததைத் தொடர்ந்து விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

    அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக்கழகத்தில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் 49 குழந்தைகள் உயிரிழந்தது கடந்த ஆண்டு தெரியவந்தது. சோதனைகுள்ளகப்பட்ட 4,142 குழந்தைகளில் 2,728 குழந்தைகள் ஒரு வயதுக்கும் குறைவானவர்கள்.

   புதிய மருந்துகளை கண்டுபிடிக்க இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த குழந்தைகள் மீது மருத்துவ பரிசோதனைகள் நடத்த அனுமதியளித்துள்ளது, அமெரிக்க அரசு. இனி இந்தியாவில் உள்ள குழந்தைகள் மீதான மருத்துவப் பரிசோதனைகளில் முழு அளவில் பன்னாட்டு மறுத்து நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இதன் பொருள்.

யார் குழந்தைகளை பரிசோதிக்க தயார்.

No comments:

Post a Comment