Monday 8 June 2015

தமிழர்களின் சாதனை


உலகிலேயே மிகப்பெரிய வழிபாட்டுத்தலம் கம்போடிய நாட்டில் உள்ளது. அங்கோர்வாட் என்ற இந்த ஆலயம் தமிழனால் கட்டப்பட்டது. இது தமிழர்களின் கலைத் திறமையை உலகுக்கு எடுத்துக் காட்டும் அற்புத கலைச் சின்னம்.

இரண்டாம் சூரியவர்மன் இந்த இடத்தைக் கைப்பற்றியவுடன் இந்த பிரமாண்ட கோவிலை கட்டினான். இந்த இடம் தான் அவனது தலை நகரமாக செயல்பட்டது. இந்தக் கோவிலை ஒரு கலைப் பொக்கிஷம் என்று கூறலாம். திரும்பிய திசையெல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இதன் ஒரு பக்கச் சுற்று சுவரே 3.6 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. அப்படி என்றால் இதன் பிரமாண்டத்தை கற்பனை செய்து பாருங்கள்.

இந்த கோவிலின் ஆரம்பக்கட்ட வடிவமைப்பு பணிகள் 12-ம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கின. 27 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட சூரியவர்மன் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் கோவிலின் வேலைகள் நிறைவடைந்தன. இதன் பின்னர் ஆறாம் ஜெயவர்மன் ஆட்சிக்கு வந்தான்.

அதுவரை இந்துக் கோவிலாக இருந்த அங்கோர்வாட் ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக புத்த வழிபாட்டுத் தளமாக மாற்றப்பட்டது. இன்று இருக்கக்கூடிய நவீன தொழில் நுட்பங்களை உபயோகித்து கட்டினால் கூட இதுபோன்ற ஒரு கட்டிடம் கட்ட 3௦௦ ஆண்டுகள் தேவைப்படும் என பொறியியல் வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

அனால் எந்த தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் குறிகிய காலத்தில் இக்கோவிலை கட்டியது சாதனைதான். கம்போடிய நாட்டின் தேசியக் கோடியில் இந்தக் கோவில்தான் தேசிய சின்னமாக பொறிக்கப்பட்டு உள்ளது.

நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கேமராவால் கூட இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை. வானத்தில் 1௦௦௦ அடிக்கு மேல் இருந்து எடுத்தால் மட்டுமே கட்டிடத்தின் முழு உருவமும் கிடைக்கிறது. இவ்வளவு சிறப்பு இந்த இடத்தைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. இது தமிழர்கள் கட்டியது என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாத ஓன்று தான்.....

No comments:

Post a Comment