Sunday 12 July 2015

மரணத்தை எதிர்பார்த்த மகான்


        1934-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வருகை தந்த காந்தியடிகள் திறந்த காரில் நின்றபடி திரளான மக்களுக்குத் தரிசனம் கொடுத்து வந்தார். அவருடன் சேருந்து பயணம் செய்த அவினாசிலிங்கம், "பாபுஜி மக்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது உண்மைதான் அதேசமயம் மக்களோடு மக்களாக யாராவது எதிரியும் இருக்கக்கூடும் அல்லவா? உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்?" என்று கவலைப்பட கேட்டார்.

   உடனே காந்திஜி சிரித்துக் கொண்டே, "அவினாசிலிங்கம் என்னைப் போன்றவர்கள் ஓன்று தூக்குக் கயிற்றில் தொங்க நேரிடும் அல்லது சுட்டுக் கொள்ளப்பட வேண்டியிருக்கும். அதனால் மரணத்துக்குப் பயந்து கொண்டு எப்போதும் பாதுகாவலோடு செல்ல முடியுமா?"

காந்திஜி சொன்னபடிதான் மகாத்மாவின் இறுதி முடுவும் அமைந்தது.

No comments:

Post a Comment