Sunday, 12 July 2015

விசித்திரமான பறவை


                ஆப்பிரிக்காவில் 'ஹார்ன் பில்' என்றொரு பறவை இனம் உள்ளது. மரப் பொந்துகளில் இது முட்டையிடும். தாய்ப் பறவை மரப் பொந்துக்குள் புகுந்து களிம்மன்னைக் கொண்டு உட்புறமாக ஓட்டையை அடைத்துவிடும். ஆண் பறவை உணவு கொண்டு வந்த பின் பெண் பறவை பொந்துக்குள் முட்டையிட்டு அடை காக்கும். அதற்கு ஐந்து வாரம் ஆகும். அதுவரை பெண் பறவை பொந்திலேயே இருக்கும். ஆண் பறவை உணவு கொண்டுவந்து தரும்.

       குஞ்சுகள் வெளிப்பட்டதும் பெண் பேரவை அடைப்பை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும் ஓட்டையை அடைத்துவிடுகிறது. சிறுதுளை வழியே ஆணும் பெண்ணும் இரை கொணர்ந்து குஞ்சுகளுக்கு ஊட்டும்.

குஞ்சுகள் சற்று வளர்ந்ததும் அடைப்பை உடைத்துக் கொண்டு வெளிப்படும்.

No comments:

Post a Comment