Tuesday 7 July 2015

புதிய தங்கச் சுரங்கம்


இந்தியாவில் ஒரேயொரு இடத்தில்தான் தங்கச் சுரங்கம் இருந்தது. அது கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயல்தான். இந்த தங்கச் சுரங்கத்திலும் தங்கம் மிகக் குறைவாகவே இருந்தது. கிடைக்கும் 

தங்கத்தைவிட இங்கு வேலை பார்க்கும் தமிழர்களுக்கு நிறைய கூலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இனிமேலும் தொடர்ந்து நடத்த முடியாது என்று கோலார் தங்கச் சுரங்கத்தை கர்நாடக அரசு இழுத்து மூடிவிட்டது. இந்தியாவில் இருந்த ஒரே தங்கச் சுரங்கமும் இல்லாமல் போனது.

இந்த நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தில் தங்கம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள்.

பன்ஸ்வாரா மாவட்டம் ராஜஸ்தான் மாநிலத்தின் தென்கோடியில் இருக்கிறது. மிகவும் பின்தங்கிய மாவட்டம். பன்ஸ் என்றால் மூங்கில் என்று அர்த்தம். பன்ஸ்வாரா என்றால் மூங்கில் நிறைந்த காடு என்று பொருள். மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதத்தினர் ஆதிவாசிகள். மத்தியப் பிரதேச எல்லையும் குஜராத் எல்லையும் பன்ஸ்வாரா மாவட்டத்தில் தான் சந்திக்கின்றன.

உலகின் மிகவும் பழமையான மழைத் தொடரான ஆரவல்லி மழைத் தொடர் இங்குதான் உள்ளது. பன்ஸ்வாராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கம் உலகத்தரம் வாய்ந்தது எனக் கண்டறியப்பட்டு உள்ளது. இனி தங்கச்சுரங்கம் சார்ந்த தொழில்களின் மையமாக பன்ஸ்வாரா திகழும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய தங்கச் சுரங்கம், வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் அளவை கணிசமாக குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கிறது. அப்படி நடந்தால் தங்கத்தின் விளையும் ஓரளவு குறையும் என்பது தங்க முதலீட்டாளர்களுக்கும் பெண்களுக்கும் ஆறுதல் தரும் செய்தியாகும்.

No comments:

Post a Comment