Tuesday 7 July 2015

சீனப்பெருஞ்சுவரின் பலம்


பழைய கட்டடங்களின் வலிமை இப்போது புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு இருப்பத்தில்லை. இதற்கு காரணம் பழைய கலவை முறைதான். இப்போது பயன்படுத்தப்படும் சிமெண்ட் கலவை நாட்கள் செல்லச்செல்ல பலவீனமாகும் தன்மையை கொண்டது. ஆனால் சிமெண்ட் கண்டுபிடிக்காத காலத்தில் உருவான கலவை முறை, நாட்கள் செல்லச்செல்ல உறுதியாகும் தன்மை கொண்டது.

சீனப்பெருஞ்சுவரும் அப்படிதான். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்டது. இன்னும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. இந்த வலிமைக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சிஜியாங் பல்கலைகழக விஞ்ஞானிகள் களத்தில் குதித்தார்கள். அந்த ஆய்வில் சீனப்பெருஞ்சுவரின் உறுதித்தன்மைக்கு அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள்தான் காரணம் என்று தெரியவந்தது. இந்த இலவையில் தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது.

தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில் அமிலோ பெக்டின் என்ற மாவுச்சத்து உள்ளது. சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள அமிலோபெக்டின் கலவைக்கு ஓட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும் சுவர்களில் விரிசல் ஏற்படாமலும் அதில் காளான் பூஞ்சை போன்றவை உருவாகாமலும் சுவரை பாதுகாக்கிறது.

இந்த கலவையை கொண்டுதான், சீன்பெருஞ்சுவரும் அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்டபின், பல்வேறு போர்களை  சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால் இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றுபோயின. மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மனிதனால் கட்டப்பட்ட மிக மிக நீளமான சுவர் சீனப் பெருஞ்சுவர். தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 5௦ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மட்டியான்யு மற்றும் சைமைதாயு என்ற இரண்டு இடங்களில் மட்டுமே பார்வையாளர்கள் சீனபெருஞ்சுவரை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற பகுதிகளில் உள்ள சுவர்கள் எல்லாம் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.

No comments:

Post a Comment