Friday 10 February 2017

சூரியனிடம் இருந்து பூமி பெரும் சக்தி



     நமது சூரிய மண்டலத்தின் மையமாக இருப்பது சூரியன். அது ஒரு நெருப்புக் கோலமாக காணப்படுகிறது. வெறும் கண்ணால பார்க்க முடியாத அளவிற்கு வெப்பமாக திகழ்கிறது. விடியகாலையிலும், மாலை நேரத்திலும் மேட்டுமே சூரியனை நாம் ஏறிட்டுப் பார்க்க முடியும். அதனுடைய பிரகாசத்தில் இருந்தே அது எவ்வளவு வெப்பமுடையதாக இருக்கும் என்பதை யூகிக்கலாம்.

    சூரியனின் வெப்பநிலையை சில விஞ்ஞான கருவிகள் மூலமாகத் தான் அறிய முடியும். நம்ப முடியாத அளவுக்கு அதன் வெப்பம் மிக மிக அதிகம். சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் சுமார் 6 ஆயிரம் டிகிரி சென்டி கிரேட் என்று பரிசோதித்து அறியப்பட்டிருகிறது. இரும்பின் உருகுநிலை கூட 1430 டிகிரி சென்டி கிரேட் தான் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு சூரிய வெப்பத்தின் கடுமையை உணரலாம். அதாவது இவ்வளவு அதிகமான வெப்பநிலையில் எந்த திடபொருளும் தன் திடத்தன்மையுடன் சூரியனின் மேற்பரப்பில் இருக்கவே முடியாது. இதில் இருந்து சூரியன் முழுவதும் வாயுக்களால் ஆனது எனபது தெரிய வருகிறது.


    சூரியனின் மேற்பரப்பில் இருந்து உள்ளே செல்ல செல்ல வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சூரியனின் மையத்தில் வெப்பம் சுமார் 1.4 கோடி டிகிரி செண்டி கிரேட் என்று கணக்கிட்டுள்ளார்கள். இத்தனை அதிகமான வெப்பநிலையில் அணுக்கதிர் வீச்சு சூரியனில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் சூரியனிடமிருந்து மிக அதிகமான சக்தி தோன்றுகிறது. இந்த அணுக்கதிர் வீச்சில் நான்கு ஹிட்ராஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து தங்களின் மொத்த பொருள் திணிவை விடக் குறைவான பொருள் திணிவுள்ள ஹீலியம் அணுவாக மாறுகின்றன. சூரியனிடம் இருந்து பூமி பெரும் வெப்ப சக்த்தியின் அளவை கண்டறிய சில சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. பூமியின் பரப்பில் ஒவ்வொரு சதுர சென்டி மீட்டர் பகுதியும் சூரியனிடம் இருந்து இரண்டு காலரி வெப்ப சக்தியை ஒவ்வொரு நிமிடமும் பெருகிறது என்பது இந்த சோதனைகள் மூலம் வெளியாகி உள்ளது. 

     இதை வைத்து சூரியனிடம் இருந்து பூமி பெரும் சக்தியின் அளவு எவ்வளவு மகத்தானது என்பது விளங்கும்.

No comments:

Post a Comment