Sunday 7 May 2017

77 வருடங்கள் உணவில்லாமல் வாழும் அதிசய மனிதர்


   1929-ம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த ஜெராட என்ற கிரமாத்தில் பிறந்தார் பிரகலாத் ஜெனி. தன்னுடைய 7-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி காட்டுபகுதியில் வாழ ஆரம்பித்தார். அந்த காட்டுபகுதியில் உள்ள ஒரு குகையில் இவர் தவம் செய்ய ஆரம்பித்ததாகவும். அப்பொழுது கொடுத்த கடவுளின் வரத்தால் அவருடைய 11-வது வயதில் இருந்து, அதாவது குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், 1940-ம் வருடத்தில் இருந்து எந்தவிதமான உணவும் இல்லாமல் உயிர்வாழ்ந்து வருகிறார்.
   1970-ம் ஆண்டுகளில் பிரபலம் அடைய ஆரம்பித்தார். அதன்பிறகு அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு இவரின் மேல் சந்தேகம் ஏற்பட்டது. இவர் உண்மையிலேயே உணவு உண்ணாமல் தான் வாழ்கின்றாரா என்ற சந்தேகம்தான் அது.
   இவரை பற்றி கேள்விப்பட்ட அகமதாபாத்தை சேர்ந்த டாக்டர் சுர்திக்ஷா இவரை பயன்படுத்தி ஒரு முறையான ஆராய்ச்சி செய்ய விருப்பம் தெரிவித்தார். சுர்திக்ஷா விருபத்துக்கு பிரகலாத் ஜெனி சம்தம் தெரிவித்தார். 2௦௦3-ம் வருடம் சுர்திக்ஷா தனது பரிசோதனையை ஆரம்பித்தார். பிரகலாத் ஜெனியை ஒரு தனிமை படுத்தப்பட்ட அறையில் தொடர்ந்து 10 நாட்கள்  தங்கவைத்தார். இந்த பத்து நாட்களில் பிரகலாத் ஜெனி தண்ணீர் கூட குடிக்கவில்லை. அதன் பிறகு அவரை சோதித்த சுர்திக்ஷா, 10 நாட்கள் உணவு இல்லாமல் இருந்தாலும் பிரகலாத் ஜெனிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
   இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார்கள். அவர்களின் கண்டுபிடிப்பின்படி பிரகலாத் ஜெனியின் மேல் வாய்பகுதியில் ஒரு துளை இருந்ததை பார்த்தார்கள். இதை பற்றி பிரகலாத் ஜெனியிடம் கேட்டதற்கு இந்த துளையின் மூலம்தான் நான் உயிர் வாழ்வதற்கான நீரினை கடவுள் தருகிறார் என்று கூறினார். இதை கேட்ட டாக்டர் மேலும் பரிசோதனையை தொடராமல் கைவிட்டனர்.
   மீண்டும் பிரகலாத் ஜெனியை வைத்து 2010-ம் ஆண்டு பரிசோதனை செய்தார்கள் அனால் இந்த முறை டாக்டர் சுதிர்ஷாவை தவிர்த்து இந்திய அரசாங்கத்தில் இருந்து சுமார் 35 ஆராய்ச்சியாளர்கள் இந்த சோதனையில் பங்குகொண்டனர். இந்த பரிசோனையின் மூலமாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ராணுவ வீரர்களுக்கும், விண்வெளி வீரர்களுக்கும் நீண்ட நாட்கள் பசியை கட்டுபடுத்தும் புதிய தொழில்நுபத்தை கண்டுபிடிக்க வாய்ப்பு இருப்பதாக நினைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
   டாக்டர் சுர்திக்ஷா தலைமையில் 2௦௦3-ம் ஆண்டு நடந்த மாதிரியான பரிசோதனை ஆரம்பமானது. ஆனால் இந்த முறை முன்பைவிட அதிகமான கவனத்துடனும், CCTV கேமிரா மூலம் அந்த ஆராச்சியில் ஈடுபட்டார்கள். சுமார் 15 நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு பிறகு 2௦௦3-ம் ஆண்டுக்கு கிடைத்த தகவல்களைத்தான் ஆராச்சியாளர்கள் பெறமுடிந்தது.
   ஆனால், என்னதான் பிரகலாத் ஜெனி தண்ணீர் கூட குடிக்காமல் இருந்தாலும் அவருடைய சிறுநீர் பையில், சிறுநீர் இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். பிரகலாத் ஜெனியை வைத்து மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனாலும் 2௦௦3-ம் ஆண்டு மற்றும் 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகளை வைத்து தான் இந்தியாவின் அதிசய மனிதர் என்று நிருபித்துவிட்டார்.

No comments:

Post a Comment