இந்தியாவில் மணப்பெண் தோழி, மாப்பிள்ளை தோழன்
இருப்பதுபோல, மேற்கத்திய நாடுகளில் மணமக்களின் தோழர்கள் இருப்பார்கள். மணப்பெண்
தோழிகளுக்கு “பிரைட்ஸ் மெயிட்” என்று பெயர். அதில் முதன்மையான நெருங்கிய தோழிகளை “மெயிட்
ஆப் ஹானர்” என்று அழைப்பார்கள். மணமகன் தோழர்களை “க்ரூம்ஸ் மென்” என்றும்
அவர்களில் முதன்மையானவரை “பெஸ்ட் மேன்” என்று அழைப்பார்கள்.
மலர் கொத்துகளை கையில் வைத்துக்கொண்டு மணமகனின்
அருகில் பல்லை காட்டி பளிச்சென்று சிரிப்பதுதான் “பிரைட்ஸ் மெயிட்”களின் வேலை. ஆனால்
“மெயிட் ஆப் ஹானராக” இருக்கும் பெண்ணுக்கு ஏகப்பட்ட கடமைகள் உண்டு. மாப்பிள்ளை
நிச்சயிக்கப்பட்டதும், தன்னுடையை “மெயிட் ஆப் ஹானரை” தேர்ந்தேடுத்துவிடுவாள்
மணப்பெண். திருமண மண்டபம், எவ்வளவு பேர், என்ன பட்ஜெட், எந்த டிரெஸ் என திருமணத்துக்கு
தேவையான எல்லாவற்றையும் தீர்மானிப்பதில் உதவி செய்வார்.
நண்பர்கள், உறவினர்களை வரவழைத்து பேச்சலர்
பார்டியை நடத்துவது “மெயிட் ஆப் ஹானரின்” முக்கியமான வேலை. எதற்காக மணமகள் பேச்சலர்
பார்டி கொடுக்க வேண்டும் தெரியுமா.
அந்த காலத்தில் மாப்பிள்ளை விட்டில் கேட்கும்
வரதட்சணையை கொடுக்க முடியாத பெண் வீட்டார் இப்படி பேச்சலர் பார்ட்டியை நடத்தினார்கள்.
விருந்துக்கு வருபவர்கள் மணப்பெண்ணுக்கு தாங்கள் விரும்பும் பரிசுகளை முன்கூட்டியே
கொடுத்து விடுவார்கள். இதைவைத்து வரதட்சணையை சமாளித்து விடுவார்கள் பெண்
வீட்டார்கள்.
இப்படி ஒரு நல்ல காரணத்துக்காக
ஆரம்பிக்கப்பட்டதுதான் பேச்சலர் பார்ட்டி. இன்று நிலைமையே வேறு. விடிய விடிய
மதுவோடு இருப்பதே பேச்சலர் பார்ட்டி என்றாகிவிட்டது.
No comments:
Post a Comment