ஜெர்மனியை சேர்ந்த அகுஸ்ட் ஹோர்ச் என்பவர் தனது தொழில் பங்குதாரருடன் இணைந்து 1899 ம் கார் தயாரிக்கும் நிறுவனம் ஓன்று தொடங்கினார். அந்த நிறுவனத்துக்கு ஹோர்ச் அண்ட் சி என்று பெயர் வைத்தனர். ஆனால் தனது பங்குதாரருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 1909 ம் ஆண்டு பிரிந்து சென்றார். பிறகு புதிய கார் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதற்கு அகுஸ்ட் ஹோர்ச் ஆட்டோ மொபைல் என பெயரிட்டார். ஆனால் சில COPY RIGHTS சிக்கல்கள் காரணமாக நிறுவனத்தின் பெயரில் இருந்த ஹோர்ச் என்பதை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஹோர்ச் என்ற ஜேர்மன் வார்த்தைக்கு கவனி என்பது அர்த்தமாகும். அதனால் லத்தீன் மொழியில் அதே அர்த்தத்தை தரும் AUDI என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்து தனது கார் தயாரிக்கும் நிறுவனத்துக்கு AUDI AUTO MOBIL WERKE M.B.H என்று பெயரிட்டார் ஹோர்ச்.
பொதுவாக கார் தயாரிக்கும் நிறுவனங்கள் புதியவகை கார்கள் வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கு முன் கிராஸ் டெஸ்ட்க்கு உட்படுத்தப்படும். இக்காலத்தில் கிராஸ் டெஸ்ட் என்பது நவீன கருவிகள், கணினி தொழில்நுட்பம் கொண்டு சுலபமா செய்யப்படுகிறது. ஆனால் இந்த மாதிரியான கிராஸ் டெஸ்ட்களை தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத, 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செய்து வருகிறது AUDI நிறுவனம். எப்படியென்றால் AUDI நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார்களை மலைப்பகுதிகளுக்கு எடுத்து சென்று பொது மக்கள் முன்னிலையில் மலையில் இருந்து உருட்டிவிடப்பட்டு பாதுகாப்பு அம்சங்கள் நிரூபிக்கப்பட்டது. 1932 ம் ஆண்டு AUDI கார் நிறுவனத்துடன் மற்ற கார் தயாரிக்கும் நிறுவனங்களான ஹோர்ச் அண்ட் சி, DKW, வான்டெரெர் ஆகியவை ஒன்றாக இணைந்து AUTO UNION உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வேறுபட்ட சந்தைப்பிரிவு ஒதுக்கப்பட்டது. ஹோர்ச் அண்ட் சி ஆடம்பர கார்களை மட்டும் தயாரித்தது. AUDI, DELUX மற்றும் நடுத்தர அளவிலான கார்களை தயாரிக்கும் முனைப்பில் இறங்கியது. வான்டெரெர் நடுத்தர அளவிலான கார்களை மட்டும் தயாரித்தது. DKW சிறிய அளவிலான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்க தொடங்கியது. இந்த நான்கு நிறுவனங்களின் இணைப்பை மையப்படுத்தியே AUDI நிறுவனத்தின் 4 இணைந்த வளையங்கள் கொண்ட LOGO உருவாக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் மெர்சிடஸ் நிறுவனத்துடன் இணைந்து அதிவேக கார்கள் தயாரிக்கும் போட்டியில் இறங்கியது AUDI நிறுவனம். பெர்டினாண்ஸ் போர்ஸ் என்பவரின் உதவியோடு AUDI AUTO UNION V16 TYPE C என்னும் அதிவேக காரை தயாரித்தது பின்புறத்தில் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்த V16 TYPE C காரின் வேகம், மணிக்கு 268.4 மைல்கல் ஆகும். முன்பெல்லாம் WORLD CHAMPIONSHIP RALLY போட்டிகளில் பின்பகுதியில் என்ஜின் பொருத்தப்பட்ட 2 சக்கர DRIVE கார்கள் மட்டுமே பங்கேற்றன. ஆனால் AUDI நிறுவனம் அதிசக்தி வாய்ந்த குவாட்ரோ ரக நான்கு சக்கர கார்களை தயாரித்து WORLD CHAMPIONSHIP RALLY போட்டியில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது. போட்டிகளில் பங்கேற்ற AUDI குவாட்ரோ ரக கார்கள் 1981 முதல் 1986 வரை பல CHAMPIONSHIP பட்டங்களை வென்றது.
GOOGLE நிறுவனம் 30 மில்லியன் டாலர் பரிசுத் தொகையைக் கொண்ட LUNAR X PRIZE என்ற போட்டியை நடத்தி வருகிறது. நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் பரப்பளவு நகர்ந்து நிலவை பற்றிய ஆய்வு பணிகளை கவனிக்கும் வாகனம் ஒன்றை உருவாக்க விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது GOOGLE நிறுவனம். ஜெர்மன் விங்ஞானிகளுடன் கைகோர்த்த AUDI நிறுவனம், குவாட்ரோ தொழில்நுட்பத்துடன் கூடிய LUNAR ROVAR ஒன்றை தயாரித்து வருகிறது. GOOGLE நடத்தும் இந்த போட்டியில் AUDI முதல் பரிசை வெல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
No comments:
Post a Comment