Tuesday 10 April 2018

உலகிலேயே 6௦௦௦ வருடம் பழைமையான மாநகரம்


   உலகில் இன்று எத்தனையோ மாநகரங்கள் இருந்தாலும் கூட, அவை அனைத்தும் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு இருக்குமா என்று தெரியாது. அதே போல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த மாநகரங்கள் எல்லாமே இன்றும் இயங்கி கொண்டு இருக்கிறதா என்றால் சந்தேகம்தான். உலகத்தில் உள்ள ரொம்ப பழமையான மாநகரங்களான கிரேக்கம், ஏதென்ஸ், ரோம் போன்றவற்றை ஆய்வு செய்யும் போது. அந்த மாநகரங்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் புதையுண்டு அதற்கு மேல் இன்னொரு நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

   ஆனால் எத்தனையோ கலாச்சார மாற்றங்களையும், இயற்கையின் பேராபத்துகளையும் கடந்து கிட்டத்தட்ட 6 ஆயிரம் வருடம் ஒரு மாநகரம் இன்றும் இயங்கிக் கொண்டு உள்ளது என்றால் அது நம்ம மதுரை தான். BBC  தொலைக்காட்சி நிறுவனம் THE STORY OF INDIA என்ற ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டனர். அதில் THE WORLDS ONLY LIVING CIVILIZATION என்று மதுரையை மிகவும் பிரமிப்பாக குறிப்பிட்டுள்ளனர். இன்று தமிழ்நாட்டில் மதுரைக்கு என்று தனித்துவமான அடையாளங்கள் எத்தனையோ உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை மல்லிகை, மதுரை மக்களின் பேசு முறை, இப்படி இன்னும் பல தனித்துவமான அடையாளங்களோடு 6000 ஆண்டுகளுக்கு மேல் ஒரு மாநகரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அது சாதாரணமான ஒரு விடையம் அல்ல.

    மதுரைக்கு தூங்க நகரம் என்ற பெயர் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த பெயர் இன்றோ நேற்றோ வந்தது கிடையாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இங்கு இரவு நேர கடைகள் இயங்குவது ரொம்ப பிரபலம். அதனால் தான் இன்று வரை மதுரையை தூங்கா நகரம் என்று அழைக்கின்றனர்.

   மதுரைக்கு பக்கத்தில் உள்ள நரசிங்கபட்டி என்ற ஒரு கிராமத்தில் தொல்லியல் துறையினர் ஒரு ஆய்வை நடத்தினர். அதில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஈமக்காடு கண்டுபிடித்துள்ளனர். ஈமக்காடு என்பது இறந்தவர்களை புதைக்கும் ஒரு இடம். அந்த ஆய்வில் பல விடயங்களை கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் கூட நம்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால். இறந்தவர்களின் பிணத்தை புதைத்த பிறகு அந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக அதற்கு மேல் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் அந்த மக்களிடம் இருந்துள்ளது. இது இறந்தவர்களை தாளியில் அடைத்தற்கும் ரொம்ப முற்பட்ட கால நாகரீகம் என்று கூறுகின்றனர்.

   இன்றும் கூட இந்த ஈமக்காட்டுக்கு வந்து வழிபாடுகள் செய்கின்றனர். எதற்காக இங்கு வழிபாடுகள் செய்கிறீர்கள் என்று கேட்டால், அதற்கான காரணங்கள் எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்களுடைய மூதாதையர்கள் இங்கு இருப்பதாக எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. அதனால் தான் இங்கு வழிபாடுகள் செய்கிறோம். என்று கூறுகின்றனர். சுமார் 6000 வருடங்களுக்கு முன்னாள் உண்மையிலேயே அவர்களின் முன்னோர்கள் புதைக்கப்பட்ட இடம்தான் என்று ஆய்வாளர்கள் கூறும் பொழுது அனைவரும் பிரமித்தனர். இப்படி மதுரையை பற்றி பல ஆச்சரியங்கள் இன்னும் ஒளிந்து கொண்டு தான் உள்ளது. ஒவ்வொரு ஆச்சரியமும் வெளியில் வரும் பொழுது தான் தெரியும் மதுரை வெறும் 6000 ஆண்டுகள் பழமையானது அல்ல அதற்கும் மேல் என்று.

No comments:

Post a Comment