Saturday 14 April 2018

ஹிட்லரேயே மன்னிப்பு கோர வைத்த தமிழன்


   ஹிட்லர் என்று சொன்னால் தொட்டில் குழந்தையும் வாய் மூடும். அப்படிப்பட்ட ஹிட்லரையே வாய் அடைக்க செய்து மன்னிப்பு கோரா வைத்தவன் ஒரு தமிழன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்

   செண்பக ராமன் சில தலைவர்களால் மறைக்கப்பட்டும், நம்மை போன்றவர்களால் மறக்கப்பட்டும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு வீரத் தமிழன். தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட செண்பக ராமன் 15 வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். இவர் தலைமறைவாக வாழவேண்டிய சூழ்நிலையில் கடல் கடந்து ஜெர்மனிக்கு போனார். அங்கேயே பயின்று பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார். செண்பக ராமனின் அறிவையும் ஆற்றலையும் கண்ட கெய்சர் மன்னன் தன்னுடைய அந்தரங்க நண்பராக மாற்றிக் கொண்டார்.

   ஒருமுறை செண்பக ராமனை ஒரு மாநாட்டில் சந்தித்தார் நேதாஜி. இவருடனான உரையாடலில் நேதாஜிக்கு கிடைத்ததுதான் இந்திய சுதந்திர போராட்டத்தை வழிநடத்தும் தாரக மந்திரமான ஜெய்ஹிந்த். மேலும் இந்தியா மீதான உலகநாடுகளின் பார்வையை தனது உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளால் உடைத்தெறிந்தார் செண்பகராமன். ஒருமுறை ஹிட்லருடன் ஒரு விருந்தில் கலந்து கொண்டார் செண்பக ராமன். அப்பொழுது இந்தியர்களுக்கு சுதந்திரம் அடையும் தகுதி இல்லை  என ஏளனமாய் உரைத்தார் ஹிட்லர். கோபம் கொண்ட செண்பக ராமன் ஹிட்லரை கடிந்ததோடு இந்தியாவின் பெருமைகளையும், அதன் ஒப்பற்ற தலைவர்களையும் பற்றி கூறி ஹிட்லரையே வாயடைக்க செய்தார்.

    உலகத்தையே அச்சம் கொள்ள வைக்கும் ஹிட்லரை கண்டித்த விதத்தை பார்த்து சுற்றி இருந்தோர் அதிர்ச்சிக்குள்ளாகினர். சொல்லாற்றலையும் உறுதியையும் கண்டு ஆடி போன ஹிட்லர். அவரிடம் மன்னிப்பு கோரினார். இருந்தாலும் சீற்றம் குறையாத செண்பக ராமன். எழுத்து வடிவ மன்னிப்பு கேட்டார். ஹிட்லர் அதனையும் கொடுத்தார். இந்த நிகழ்வே வருங்காலத்தில் செண்பக ராமனின் வாழ்வை முடிக்க காரணமாக இருந்ததது.

   தமிழன் எப்பொழுதும் துரோகத்தாலும், வஞ்சகத்தாலும் மட்டுமே வீழ்த்த படுகிறான். அதே போலதான் செண்பக ராமனும் வீழ்த்தப்பட்டார். தனது தலைவர் இவரிடம் தோற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஹிட்லரின் நாஜிக்கள், செண்பகராமனின் உணவில் நயவஞ்சகமாய் விஷத்தை கலந்தனர். அந்த விஷம் அவரை மெல்ல மெல்ல நோயாளியாக்கி  வீழ்த்தியதுபல மேதகு சிறப்புகள் உடைய செண்பக ராமன் 1936 ம் ஆண்டு மே 26 ந் தேதி உயிரிழந்தார். இப்படிப்பட்ட மாவீரனை நமது அரசாங்கம் 2009 ம் ஆண்டு தான் சிலை நிறுவி அடையாள படுத்தியது. நமது வரலாறே நமது முகவரி ஆதலால் வரலாற்றை காப்போம் அதன் நாயகர்களை போற்றுவோம்.

No comments:

Post a Comment