Saturday 28 April 2018

பாம்பிற்கு ஏன் பாலும் முட்டையும் ?


      நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்த சில வரைமுறைகளை இன்றைய தலைமுறையினர் சிலர் மூடநம்பிக்கை என்று கூறுகின்றனர். இம் மாதிரியான மூடநம்பிக்கை என்று கூறுகின்ற செயல்களை விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று தான்   பாம்பிற்கு ஏன்  பாலும் முட்டையும்

    விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயம் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள் என்று கேட்கலாம். நம்முடைய முன்னோர்களுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிகமிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது.

        ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

            பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசமாக இருக்கும். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி செல்லும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது. ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

            இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள் அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment