Thursday, 26 April 2018

பழமையான புதிய மனித இனம்


     இதுவரை அறியப்படாத ஒரு புதிய மனித இனம் மண்ணில் உலவித் திரிந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சீனாவில் சில குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிரான புதைபடிவங்கள், அந்த அறியப்படாத மனித இனத்துக்குச் சிந்தமானதாக தொல்லுயிரியல் நிபுணர்களால் கருதப்படுகிறது. அந்த எலும்புகள், மிகப் பழங்கால மற்றும் நவீன மனிதனின் அம்சங்களைக் கொண்டிருப்பதும் விஞ்ஞானிகளைக்குழப்புகிறது.

இன்னொரு ஆச்சரியமூட்டும் அம்சம், இந்த எலும்புகள் 11 ஆயிரத்து 5௦௦ ஆண்டுகள் பலமையானவைதான். அதாவது நவீன மனிதன் பூமியில் காணப்பட்ட அதே காலகட்டத்தில் இந்தப் புதிரான மனிதன் இருந்திருக்கிறான். இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால் சீனாவின் ஆரம்பகால விவசாயிகள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் வசித்திருக்கிறார்கள்.

   இந்த புதிய புதைபடிவங்கள், இதுவரை அறியப்படாத மனித இனத்துக்குச் சொந்தமான இருக்காலம். அதாவது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் முடிவதற்கு முன்புவரை வாழ்ந்த ஓர் இனம். என்பது, முன்னணி தொல்லுயிரியல் ஆய்வாளரான ஆஸ்திரேலியாவின் நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேரன் கர்நோவின் கருத்து.

    அவரே, “அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த, முன்பு அறியப்படாத, ஆரம்பகால நவீன மனிதர்களாக இருக்கலாம். அவர்கள் மரபனுரீதியகத் தொடராமல் போயிருக்கலாம்” என்கிறார் கர்னோ.

     தென்மேற்குச் சீனாவில் மேங்சி நகருக்கு அருகில் உள்ள மலுடோங் எனப்படும் சிவப்பு மான் குகைப் பகுதியில் உள்ள குவாரியில் இந்தப் புதைப் படிவங்களை சுரங்கத் தொழிலாளர்கள் கண்டு பிடித்தனர். 1989-ம் ஆண்டிலேயே அந்த மூன்று புதைபடிவங்களையும் அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அனால் 2008-ம் ஆண்டில்தான் அவை தொடர்பான ஆய்வுகள் தொடங்கின.


     குறிப்பிட்ட புதைபடிவங்களுக்கு உரிய மனிதர்கள், மறைந்து போன சிவப்பு மானை உணவாக உட்கொண்டிருப்பதா, அவர்களை ‘சிவப்பு மானை உணவாக உட்கொண்டிருப்பதால், அவர்களை சிவப்பு மான் குகை மனிதர்கள் என்று ஆய்வரளர்கள் குறிப்பிடுகின்றனர்’

No comments:

Post a Comment