Sunday 27 May 2018

மதம் மாறிய மருத நாயகம்


   மருத நாயகம் என்றால் பலருக்கும், நடிகர் கமல் நீண்ட காலமாக திரைப்படமாக எடுக்க தவித்து வரும் ஒரு படமாக மட்டுமே தெரியும். ஆனால் அதையும் தாண்டி இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட அந்த உண்மையான மருத நாயகம் யார் என்பது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. உண்மையில் சுதந்திர போராட்டத்தில் மருத நாயகம் என்ற பெயரை காண்பது அரிது. காரணம் மருத நாயகம் என்ற பெயர் அந்த வரலாற்று பக்கங்களில் பெரியதாக பொறிக்கப்பட வில்லை.

   17௦௦ ம் ஆண்டுகளில் வாழ்ந்தவர் இந்த மருத நாயகம். இவரது இயற்பெயர் மருத நாயகம் என்று இருந்தாலும், இஸ்லாமிய சமயத்தின் மீது கொண்ட பற்றால் தனது பெயரை முகமது யூசுப் கான் என்று மாற்றிக் கொண்டார். இந்த பெயரை நீங்கள் இந்தய வரலாற்றில் கேள்விபட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மருத நாயகம் பிறந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பணையூரில் தான்.

   தனது இளம் வயதிலேயே இஸ்லாம் மதத்திற்கு மாறிய மருத நாயகம் என்னும் யூசுப் கான். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், உருது, போர்ச்சுகீசிய மொழிகளில் கற்று தேர்ந்த மாவீரன் யூசுப் கான். இந்தியாவில் பெரும் பகுதியை பிடித்து ஆட்சி செய்ய ஆங்கிலேயர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்கள் மத்தியில் பெரும் போட்டி நடைபெற்று வந்தது. அந்த நாடு பிடிக்கும் யூத்தத்தில் யூசுப் கான் வீரத்தை கண்டு வியந்த ராபர்ட் க்லைவ் தனது படையில் யூசுப் கானை சேர்த்துக் கொண்டார்.

   தனது படையில் யூசுப் கான் இணைந்த பிறகு அவருக்கு ஐரோப்பிய பயிற்சிகளை வழங்கினார் ராபர்ட் க்ளைவ். 1752 ல் நடந்த ஆற்காடு முற்றுகை போரில் யூசுப் கான் சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடி கொடுத்ததால், சிப்பாய் படை தளபதி என்னும் கான் சாகிப் பட்டம் முகமது யூசுப் கானுக்கு வழங்கப்பட்டது. 1755 ல் பாளையக்காரர்களிடம் இருந்து சரியாக கப்பம் வசூலித்து கொடுத்த காரணத்தால் 1759 ல் நெல்லையின் கவர்னராக யூசுப் கானை ஆங்கிலேய அரசு நியமித்தது. சென்னையை 1758 ல் முற்றுகையிட்ட பிரஞ்சு படையை கொரில்லா தாக்குதல் மூலம் தோற்கடித்தார் முகமது யூசுப் கான். இந்த வெற்றியின் பரிசாக கமாண்டோ கான் என்னும் பதவி உயர்வு கிடைத்தது. முகமது யூசுப் கான் மதராச பட்டினம் சென்ற போது கொள்ளைகாரர்கள் மீனாட்சி அம்மன் கோவிலை சூறையாடியதை அறிந்து, அவர்களிடம் சண்டையிட்டு கோவில் நிலங்களை மீட்டு நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

   அது மட்டும் இன்றி அங்கே குளங்கள் வெட்டுவது கோட்டைகளை புதுபிப்பது என பல நல்ல காரியங்களை செய்ததால் முகமது யூசுப் கானிற்கு மக்கள் மத்தில் நல்ல செல்வாக்கு கிடைத்தது. முகமது யூசுப் கானிற்கு மக்கள் ஆதரவை அதிகரித்து வருவதை அறிந்த ஆங்கிலேய அரசு கோபம் கொண்டது. அதை தடுக்க மருத நாயகம் ஆற்காடு நவாப்பின் பணியால் என ஆணையிட்டது. இதன் காரணத்தால் முகமது யூசுப் கான் கோபம் கொண்டார். மேலும் மக்கள் மத்தியில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக குற்றம் சாட்டுவதாக கூறி கைது செய்ய அறிவித்தது. 1763 ல் 27,000 பேர்களை படையில் சேர்த்து ஆங்கிலேய படைக்கு எதிராக சண்டையிட்டு மதுரையில் வெற்றிக்கொடி கட்டினார் முகமது யூசுப் கான். இதன் காரணமாக மேலும் முகமது யூசுப் மீது அதிக கோபம் கொண்ட ஆங்கிலேய அரசு தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தது.

   1764 ல் ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேய அரசும் யூசுப் கானின் கோட்டையை முற்றுகையிட்டு போரிட்டது. வீரர்களுக்கு செல்லும் நீர், உணவு தடுத்து அவர்களை சோர்வடைய செய்து தந்திரமாக வெற்றி அண்டைந்தார்கள் ஆங்கிலேயர்கள். கடைசியாக அக்டோபர் 1௦ 1764 ல் கைது செய்யப்பட்டு 16 ம் நாள் தூக்கிலிடபட்டார் மருத நாயகம்.

   உயிரிழந்த பிறகும் தந்திரமாக உயிரெழுந்து வந்து விடுவானோ என்ற அச்சத்தால் மருத நாயகத்தின் உடலை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் புதைத்தது ஆங்கிலேய அரசு. தலை திருச்சியிலும், கைகள் நெல்லை பாளையங்கோட்டையிலும், கால்கள் தேனீ பெரிய குளத்திலும், உடல் மதுரை சம்பட்டிபுரம், என பல பகுதிகளில் மருத நாயகத்தின் உடல் பாகங்கள் புதைக்கப்பட்டன. இவரின் கால்கள் தேனியின் வடகரை தர்காவில் புதைக்கப்பட்டது பலருக்கும் இன்னும் அறியாது வண்ணம் உள்ளது.

No comments:

Post a Comment