Thursday, 7 June 2018

இந்தியாவுக்கு ஏன் நடு இரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது

   இந்திய சுதந்திர போராட்டம் 1947-க்கு பின் தீவிரமானது அதேநேரத்தில் இரண்டாம் உலகபோரும் ஏற்பட்டது. போரின் காரணமாக ஆங்கிலேய அரசு கஜானா வேகமாக காலியானது. சொந்த நாட்டையே நிர்வாகம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 1945-ம் ஆண்டு பிரிட்டனில் நடந்த, பொது தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்தது. இதற்கு முக்கிய காரணம் தனது வாக்குறுதியில் இந்திய உள்ளிட்ட காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது.
  இத்தகைய காரணங்களால் 1948-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்து இருந்தது. இந்த நிலையில் 1947-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுபேற்றார். உடனடியாக இவர் நேரு, ஜின்னா உள்ளிட்ட தலைவர்களிடம் தொடர் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியவில்லை. காரணம் ஜின்னா தனி நாடு கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். நாட்டில் மக்களிடையே பதற்றமான சூழல் உருவானது.
   இதை சற்றும் எதிர்பார்க்காத மவுண்ட்பேட்டன் முன்னதாகவே சுதந்திரம் வழங்குவதற்கு ஆளானார். இது தொடர்பாக 1947-ல் ஜூன் மாதம் நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே சுதந்திரம் மற்றும் நாட்டை பிரிப்பது பற்றி முடிவு செய்ய பட்டது. மவுண்ட்பேட்டனுக்கு ஆகஸ்ட் 15 தனிப்பட்ட முறையில் விருப்பமான தேதி. ஏனென்றால் இரண்டாம் உலகபோரின் முடிவில் 1945 ஆகஸ்ட் 15-ல் தான் ஜப்பானிய வீரர்கள், அப்போது ஆங்கிலேயர்களின் கிழக்காசிய கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் சரணடைந்தனர். இதனால் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க மவுண்ட்பேட்டன் விரும்பினார்.
   இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் என அறிவிக்கப்பட்ட உடன் ஜோதிடர்கள், அன்றைய நாள் சரியில்லை எனவும் 2 நாள் கழித்து கொடுக்கலாம் என இந்திய தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆகஸ்ட் 15 என்பதில் மவுண்ட்பேட்டன் உறுதியாக இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஆங்கிலேயர்களின் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள், ஆனால் இந்தியர்களுக்கோ சூரியன் உதயமாகும் நேரம் தான் புதிய நாள். இதனால்தான் ஆகஸ்ட் 15 நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment