Wednesday, 6 June 2018

உப்பு தான் சம்பளம்


   ‘உப்பில்லா பண்டம் குப்பையிலேஎன்றொரு பழமொழி உண்டு. அதிகமாக உப்பு சேர்ந்தால் உடனே குப்பைக்கு போய் விடும் என்கிறார்கள், மருத்துவர்கள். ரத்த அழுத்தம், மாரடைப்பு என்று பல உயிர்க்கொல்லி நோய்களை ஏற்படுத்தும் தன்மை உப்புக்கு உண்டு.

   என்னதான் டாக்டர்கள் எச்சரித்தாலும் மனிதர்கள் உப்புக்கு அடிமையாகத் தான் இருக்கிறார்கள். உப்பின் மீதுள்ள ஆவல் தான் மூலையைத் தூண்டி விடுகிறது என்று சமிபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. உப்புக்கு பாறை உப்பு, கடல் உப்பு, என்ற இரண்டு மூலங்கள் இருக்கின்றன. கடல் உப்புதான் வர்த்தக ரீதியாக அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றிய ரோமானிய வீரர்களுக்கு உப்பு தான் சம்பளமாக தரப்பட்டது. உப்புக்கு அவ்வளவு மரியாதை இருந்தது.

   சால்ட் என்ற லத்தீன் வார்த்தை சம்பளம் என்பதை குறிக்கிறது. சாலரி எனபது இந்த வார்த்தையில் இருந்து உருவானதே. வேலைக்கு சம்பளமாக சால்ட் (உப்பு) வழங்கப்பட்டதால் அதுவே பிறகு மருவி சாலரி என்றானது.

   ஆரம்ப காலத்தில் போருக்கு பணம் திரட்டுவதற்காக உப்பு அதிக விலைக்கு வாங்கப்பட்டது. அதன்பிறகு சாதாரண மக்களும் உப்பை வாங்கும் வகையில் விலை குறைக்கப்பட்டது. ஆரம்பத்தில் விலை கூடுதலாக விற்கப்பட்டதால் உப்பை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல 40 ஆயிரம் ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. பிறகு உப்பை கொண்டு செல்வதற்காகவே சாலை அமைத்தார்கள்.

   உப்பின் பெருமை அதிகரித்ததை அடுத்து மேலை நாடுகளில் 11-ம் நூற்றாண்டில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள், நகரங்கள், ஏரிகள் பலவற்றுக்கும் உப்பு என்ற வார்த்தையை இணைத்து பெயர்கள் சூட்டப்பட்டன. முற்காலத்தில் உப்பு குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டதால் அதன் விலை அதிகமாக இருந்தது. அந்த உற்பத்தி பிற்காலத்தில் அதிகரித்ததால் உப்பின் விளையும் குறையத் தொடங்கியது.

   உப்பு, மூளை அணுக்களையும் மூளையின் தொடர்புகளையும், மரபணுக்களையும் தூண்டி விருகிறது என்று விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். சிலர் போதைக்கு அல்லது சிகரெட்டிற்கு அடியாக இருப்பார்கள். அந்த போதையோ சிகரெட்டோ கிடைக்காவிட்டால் அவர்களுக்கு அவற்றின் மேல் மோகம் அதிகரிக்கும். அப்போது அவர்களது மூளை பல்வேறு வழிகளில் சிந்திக்கும். அதைப்போலவே உப்பை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் இருக்கிறதே அது மூளையின் நரம்புகளை தூண்டி விடும் என்று இந்த ஆராய்ச்சியை நடத்திய மெல்போர்ன் பலகலைகழக மருத்துவப் பேராசிரியர் டெரிக் டென்டன் கூறுகிறார்.

  மிகுந்த சோதனைக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்ததாக டெரிக் கூறினார். அளவான உப்பே வளமான உடல்நலத்துக்கு நல்லது என்று மருத்துவ வல்லுனர்களும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment