Monday 25 June 2018

KFC chicken நிறுவனர் தற்கொலைக்கு முயன்றவர்


    இவர் ஐந்து வயதாக இருக்கும் போது இவருடைய அப்பா இறந்துவிட்டார். 16 வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பையும் நிறுத்தி விட்டார். இருந்தாலும் இவர் 17 வயதுக்குள் 4 விதமான தொழில்கள் செய்து தோற்று போனார். மேலும் 18 வயதில் திருமணம் செய்து கொண்டு 19 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையும் ஆனார். இருந்தாலும் 20 வயதில் அவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். இவர் 18 வயதில் இருந்து 22 வயதுக்குள் தொடர் வண்டி பாதையின் நடத்துனராக பணியாற்றினார். பின்னர் ராணுவத்திலும் சேர்ந்தார், போதிய தகுதி இல்லாததால் அங்கிருந்தும் துரத்தப்பட்டார்.

    பிறகு சட்டக்கல்லூரியில் சேர விண்ணப்பித்தார், ஆனால் அங்கேயும் திறமை இல்லாததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின் ஆயுள் காப்பீடு விற்பனையில் இருந்தார், ஆனால் ஆட்கள் சேர்க்க முடியாததால் இந்த வேலையையும் விட்டார். கடைசியாக ஒரு சின்ன உணவு கூடத்தில் சுத்தம் செய்யும் பணியில் சேர்ந்து, சமையல் செய்ய பணியாட்கள் வராத நேரத்தில் சமையலும் செய்யத் தொடங்கினர். இவர் 65 வயதில் வெறும் 105 டாலருடன், அதாவது இந்திய மதிப்பில் 6,825 ரூபாய் மதிப்புடன் பணியில் இருந்து ஓய்வும் பெற்றார். அதற்கு மேல் அவர் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை என்று அரசாங்கமே அறிவித்தது. அவர் வாழ்க்கை முழுவதும் வறுமையும் தோல்வியும் தான் நிறைந்து இருந்தது.

    இதனால் மிகவும் மனா உளைச்சலுக்கு ஆளான இவர் தற்கொலை செய்து கொள்ளவும் முடிவு எடுத்தார். ஒரு மரத்தடியில் அமர்ந்து ஒரு உயிலையும் எழுத ஆரம்பித்தார், அப்பொழுது தான் அவருக்கு ஒரு விஷயம் தெரிந்தது. மற்றவர்களை விட தான் சமையலில் சிறந்தவர் என்று. இதனால் 87 டாலர் அதாவது 5655 ரூபாயை தனக்கு தெரிந்தவர்களிடம் கடனாக பெற்றார். மேலும் கொஞ்சம் சிக்கனும், மசாலா பொருட்களும் சேகரித்து சமையல் செய்து அவரே வீடு வீடாக சென்று விற்பனையும் செய்ய ஆரம்பித்தார். அதற்கு கேட்டகி சிக்கன் என்று பெயரும் வைத்தார். 65 வயதில் தனது வாழக்கையை முடித்து கொள்ள நினைத்த இவர் தனது 88 வயதில் மிகப்பெரிய உணவுக் கூடத்தின் சக்ரவர்த்தியாக விளங்கினார்.

    இப்பொழுது இவர் ஏற்படுத்திய KFC சிக்கன் என்று சொல்லப்படும் Kentucky Fried Chicken உணவகத்தை மொத்தம் 130 நாடுகளில் 20,000 மேற்பட்ட கிளைகளை கொண்டு அமைந்துள்ளது. KFC தான் உலகின் 2வது உணவு சங்கிலி என்று பெயர் பெற்றுள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா தகுதிகளும் நமக்குள்ளேயே ஒளிந்துள்ளது. அதை சரியாக தேடி கண்டு பிடித்தோம் என்றால் நாளைய வரலாறு நமது பெயரை நிச்சயம் சொல்லும். KFC நிறுவனர் Colonel Harland Sanders ன் வாழ்க்கை சரித்திரத்தின் தத்துவம்.

No comments:

Post a Comment