Sunday 22 July 2018

கடவுள் நகரம்


  உலகில் பல்வேறு விதமான நகரங்கள், கிராமங்கள் அமைந்துள்ளன. அவற்றில்டியோடிஹுவாக்கன் என்று நாக்கை சுளுக்க வைக்கும் பெயர் கொண்ட நகரம் ரொம்பவே வித்தியாசமானது. மத்திய மெக்சிகோவில் அமைந்துள்ள இந்த மர்மங்கள் நிறைந்த நகரம் யாரால், எப்போது நிர்மாணிக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.



   ஏஜ்டெக் இன மக்களால் அமைக்கப்பட்டடிருக்கலாம் என கூறப்படும் அந்த நகரம் கி.மு 1௦௦ முதல் கி.பி. 65 வரையிலான கால கட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்திருக்கும் என்று தொல்லியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.



    மேலும், அந்த நகரம் தான் கி.பி. 1400-க்கு முன்பு, பூமியின் வடக்குப் பகுதியிலேயே மிகப்பெரிய நகரமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டியோடிஹுவாக்கன் என்ற பெயர்நாகுவாட்டல் மொழியேப் பேசிய ஏஜ்டெக் இன மக்களால் சூட்டப்பட்டுள்ளது. அந்த பெயருக்கு கடவுள்களின் பிறப்பிடம் என்று பொருளாம்.



    அந்தப் பெயருக்கான காரணம். கடவுள்கள் அந்த நகரத்தில் தான் பிரபஞ்சத்தைப் படைத்ததாக ஏஜ்டெக் இனமக்கள் நம்பியதுதான். இந்த நகரில் எண்ணற்ற குடியிருப்புப் பகுதிகளும், எகிப்தில் உள்ள பிரமிடுகளைப் போன்ற பல பிரமிடுகளும் அமைந்துள்ளது.



    இந்து கோவில்களும் அமைந்துள்ளன. இக்கோவில்களில் சூரியன் மற்றும் சந்திரனுக்கு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடவுளுக்கான கோவில்களாக அமைந்துள்ள பிரமிடுகளை, தொல்லியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்தபோது ஏராளமான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.



    அந்தப் பலிகள், கோவிலை கட்டும்போது ஏற்பட்ட தடைகளை விலக்கவும் வெற்றிகரமாக கோவில்களைக் கட்டி முடிக்கவும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்துவிதமான தொழில்களுக்கும், கலைகளுக்கும் முக்கிய நகராக இந்த நகரம் விளங்கியுள்ளது என்பது அதன் கட்டமைப்பில் இருந்து தெரிகிறது.



     பல ஆண்டுகள் செளுமையாகத் திகழ்ந்து வந்த அந்த நகரத்தின் அழிவு எதனால் ஏற்பட்டது என்ற கேள்விக்கான பதில் இன்று வரை கிடைக்கவில்லை. அந்த நகரத்தின் முழு அளவு தெரிந்த போதிலும் கூட மறைந்துள்ள பகுதிகளில் வெறும் 5 சதவீதம் மட்டுமே அறியப்பட்டுள்ளது.



    ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டுக்குள் அந்த நகரமும், அதன் மக்களும் அழிந்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்களால் அதற்கான காரணத்தை மட்டும் தெளிவாக கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது சிறந்த தொல்லியல் ஆராய்ச்சி இடமாக விளங்கும் அந்த நகரத்தில் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.


No comments:

Post a Comment