Tuesday 14 August 2018

உலகின் அதிக உயிரினங்களை கொண்ட நாடு இந்தியா


   உலகிலேயே மிக அதிக உயிரினப்பன்மை உள்ள நாடுகளில்  ஒன்றாக இந்தியா மதிக்கப்படுகிறது. உலகில் உள்ள 190 நாடுகளில், 17 நாடுகளில் மட்டும் 7௦ சதவீத தாவர, விளங்கு உயிரினங்கள் உள்ளன. இந்த 17 நாடுகளும் பெரும் பன்மய நாடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன. அவற்றுள் இந்தியாவும் ஓன்று. ஏறத்தாள 91,௦௦௦ உயிரினங்களும், 45,500 தாவரங்களும் நம் நாட்டில் இனம் காணப்பட்டுப் பட்டியலிடப் பட்டுக்கொண்டே உள்ளன. 45 ஆயிரம் தாவர இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானவை வேறு எங்கும் காணப்படாதவை.

   இன்னும் இனம் கண்டறியப்படாத 4,00,000 உயிரினங்கள் இந்தியாவில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டு உள்ளனர். இந்தப் பன்மை 3,500 கோடி ஆண்டு வரலாற்றைக் கொண்ட பரிணாம வளர்ச்சியின் விளைவு என்றும் உயிரியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்பன்மயத்தை பாதுகாப்பது நமது கடமை. அது மட்டுமன்றி, மனித இனம் நீடித்து வாழ வேண்டுமானால் இந்த பன்மையம் அத்தியாவசியம். பருவநிலை மாற்றத்தில் இருந்து காக்கவும், பூட்ச்சி நோய்களில் இருந்து தப்பிக்கவும் கூட இது அவசியம்.

   ஒவ்வொரு தாவர இனத்திலும் எத்தனை ராகங்கள் என்று கணக்கிட்டால் நம் உயிரினப் பன்மையின் விரிவும், ஆழமும், வீச்சும், வலிமையும் நமை வாய் பிளக்க வைக்கும்.

   இந்த பன்மயத்தால், நுகர்வோருக்கும் பல நமைகள் உத்தரவாதம். பிள்ளை பெற்ற தாய்க்குக் கொடுப்பதாகு, கருவுற்ற தாய்க்கு, நீரிழிவு நோய்க்கு, உடல் வீரியத்துக்கு, வயதானவர்களுக்கு, விரைவாக ஜீரணிக்க, வாசனை மிகுந்தது எனப் பலப்பல ரகங்ககள் நம் பாரம்பரியத்தில் மிளிர்ந்தன. இவை இயற்கையாகப் பல்லாயிரக்கணக்கான வருடப் பரிணாம வளர்ச்சியில் கிடைத்த வரப்பிரசாதம். மண்ணுக்கு, சுற்றுச்சூழலுக்கு, பல்லுயிர் பேண, உடல் ஆரோக்கியத்துக்கு, நாட்டின் இறையானமைக்கு, உழவர்களின் வாழ்வாதாரத்துக்கும் இது போலப் பன்மைத்துவம் மிக அத்தியாவசியம்.

No comments:

Post a Comment