Friday 3 August 2018

மனிதனுக்கு சத்தியம் செய்து கொடுத்த முதலைகள்


   மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள புர்கினோ பாசோ நாட்டில் இருக்கிறது பாஷோல் கிராம். இங்கே மோசிஸ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் முதலைகளுடன் மிகவும் நெருங்கி பழகுகிறார்கள். இந்தக் கிராமத்தில் உள்ள குளத்தில் சுமார் 15௦ முதலைகள் வசிக்கின்றன. ஆனால் குளத்தில் அமர்ந்து பெண்கள் சாதரணமாக துணி துவைக்கிறார்கள். குலத்துக்கு அருகில் இருக்கும் நிலத்தில் ஆடுகளை மேக்கிரார்கள். குழந்தைகள் குளக்கரைகளில் விளையாடுகிறார்கள். இவர்களுக்கு அருகிலேயே முதலைகள் ஒய்வு எடுகின்றன. சிலர் முதலைகளுக்கு அருகிலோ அல்லது அதன் மீதோ அமர்ந்து அரட்டையடிக்கின்றார்கள். இங்கு வாழும் மனிதர்களுக்கு முதலைகளை கண்டு துளியும் பயம் இல்லை. அதே போல் முதலைகளுக்கும் மனிதர்களை கண்டு பயபடுவது இல்லை.

   15 ம் நூற்றாண்டில் இந்த கிராமத்தில் மழையே இல்லை. எங்கும் வறட்சி நிலவியது. மக்கள் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த போது, சில முதலைகள் இந்தக் குளத்தை மக்களுக்கு அடையாளம் காட்டின. அப்போது தான் இப்படி ஒரு குளம் இருப்பதே அவர்களுக்குத் தெரிந்தது. அன்று முதல் முதலைகள் மீது மக்கள் மிகவும் அன்பும் அக்கறையும் காட்டி வருகின்றனர். முதலைகளுக்கு அவ்வபோது கோழி, இறைச்சி போன்றவற்றையும் வழங்கி வருகிறார்கள். முதலைகள் இறந்து போனால், இறுதிச் சடங்கு நடத்தி, புதைக்கவும் செய்கிறார்கள்.
   “இந்த முதலைகளால் தான் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். அதற்காகவே இந்த அன்பைக் காட்டுகிறோம். எனக்கு வயது 7௦ ஆகிறது. இந்த 7௦ ஆண்டுகளில் முதலை கடித்தோ, அல்லது தாக்கியோ ஒரு நிகழ்வு கூட நடந்ததில்லை. ஆபத்து அறியாமல் அருகில் சென்று விளையாடும் குழந்தைகளை கூட முதலைகள் பொம்மை போலப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றன. எங்கள் முன்னோர்களுக்கு இவை தீங்கு இழைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுத்ததாக ஒரு செவி வழி கதை இருக்கிறது. அது உண்மை என்பது போலத்தான் இந்த முதலைகளும் எங்களிடம் நடந்து கொள்கின்றன.” என்கிறார் இந்த கிராமத்து பெரியவர்.
   மனிதர்களும் முதலைகளும் நெருங்கி பழகும் இந்த கிராமத்தை கேள்விப்பட்டு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் முதலைக்கு உணவளிக்கலாம், முதலை மீது அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். கிராமத்தினரே முதலைகளுக்காக கோழி, இறைச்சி போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அவற்றை ஒரு குச்சியில் கட்டி முதலைகளுக்கு கொடுக்கலாம். அருகில் பயிற்சியாளர்கள் இருப்பார்கள். சாப்பிட்டு, ஒய்வு எடுக்கும் முதலைகள் மீது அமர்ந்து படம் எடுத்துக் கொள்ளலாம்.
   இந்தன் மூலம் இந்தக் கிராத்து மக்களுக்கு வருமானத்துக்கும் வலி ஏற்பட்டது. ஆனால் சமீப ஆண்டுகளாக மலை எயல்லாமல் போய்விட்டது. குளத்து நீரும் ஆண்டுக்கு  ஆண்டு வற்றிக்கொண்டே செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருவதும் வெகுவாக குறைந்து விட்டது. முதலைகளும் மக்களும் எதிர்காலம் குறித்து அச்சத்தில் இருக்கின்றனர். ஆரம்பக் காலத்தில் முதலைகள் புதுக் குளத்தை அடையாளம் காட்டியது போல, இப்போதும் காட்டும் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் இந்த கிராமத்து மக்கள்.

No comments:

Post a Comment