Wednesday 17 October 2018

சூரியனில் மிகப்பெரிய வெடிப்பு


   இரண்டாயிரமாவது வருடம் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி சனிக்கிழமை சூரியனில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. பத்து வருடங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்பு இதுதான். பல கோடி டன் எடையுள்ள அதிஉஷ்ண ரேடியோ ஆக்டிவ் வாயுவை இது சூரியனிலிருந்து வெளியேற்றியது. 3௦௦௦ வருடம் அமெரிக்காவில் உள்ள எல்லா மின் நிலையங்களும் தொடர்ந்து இயக்கி உற்பத்தி செய்யும் மின்சக்தியை, இருபதே நிமிடங்களில் சூரியன் அன்று வெளிப்பத்திவிட்டது.

   கலிபோர்னியாவில் உள்ள சூரிய மற்றும் ஹீலியோ ஷ்பெறிக் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த சூரிய சக்தி, பூமியை நோக்கி வரவில்லை என்று விளக்கம் அளித்தனர்.. ஆனால் இந்த சூரிய வெடிப்பு என்பது தகவல் தொடர்பை குலைத்து, மின் உற்பத்தியைத் தடை செய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.

   ரேடியோ ஆக்டிவ் வாயுக்கள் பூமியைத் தாக்கும்போது எலெக்ட்ரோ மாக்னடிக் புயல் ஏற்றபட்டு – மின் உற்பத்தி சாலைகள், சாட்டிலைட்டுகள், மொபைல் போன்கள், விமானங்கள் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும்.

     1989ல் ஏற்பட்ட சூரிய வெடிப்பு 9 மணி நேர இருட்டிப்பை கனடாவில் ஏற்படுத்தியது. இன்னொரு சூரிய வெடிப்பு 1997ல் 7௦௦ கோடி மதிப்புள்ள டெலிவிஷன் சாட்டிலைட்டைச் செயலிழக்கச் செய்தது.

No comments:

Post a Comment