மர்மங்கள், அமானுஷ்யங்கள், புதிர்கள் என இவைகளை சார்ந்த எந்த விசயமாக
இருந்தாலும் அது உண்மையோ, பொய்யோ, கட்டுகதையோ அல்லது உண்மையாக நடந்த
சம்பவங்களின் தொகுப்போ, எதுவாக இருந்தாலும், இவைகளை சார்ந்த தகவல்களை
தெரிந்து கொள்வதில் மனிதர்களுக்கு என்றுமே ஆர்வம் அதிகம்தான் என்பதை
மறுக்கமுடியாது.
இமயமலையில் வெகுகாலமாக நிலவி வரும் ஒரு மர்மம்தான் YETI. YETI என்பது ஒரு மர்ம மனிதன். இதை பற்றிய ஒரு சில சுவாரஸ்மான தகவல்கள் உங்களுக்காக.
YETI என்று சொல்லகூடிய மர்ம மனிதனை ABOMINABLE KNOW MAN பார்க்கவே அருவருப்பாக காட்சியளிக்கும் பனிமனிதன் என்றும் கூறுகின்றனர். வானரம் போன்ற உருவ தோற்றமும், சராசரி மனிதனை விட இரண்டு மடங்கு அதிக உயரம் கொண்டு இமயமலை பகுதிகளில் இந்த பனி மனிதன் வசிக்கிறான் என்று நேபாள், பூட்டான், திபெத் பகுதிகளில் நம்பப்படுகிறது.
YETI என்ற இந்த பெயர், இந்த பகுதிகளில் புராண காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த பனி மனிதனை பற்றிய கதைகள் 19-ம் நூற்றாண்டில் இருந்தே இந்த பகுதி மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. Scientific community என்று சொல்லப்படும் அறிவியல் சமுகம் இந்த YETI என்ற பனி மனிதன் ஒரு புராணகால கற்பனை மனிதன் என்றும் கூறுகிறது.
ஆனால் இந்த மர்மத்தை பற்றிய ஒரு சுவாரஸ்மான விஷயம் என்னவென்றால், ஆராய்ச்சியாளர்கள் இமயமலை பகுதிகளில் கிடைத்த சில ரோமங்களை கொண்டு செய்த GENETIC STUDY என்று சொல்லப்படும் மரபணு தொடர்பான ஆராய்ச்சியில் அந்த ரோமங்களின் DNA க்களை கண்டறிந்தனர். Pre-historic bear என்று சொல்லப்படும் புராண காலத்தில் பனிபிரதேசத்தில் வாழ்ந்த கரடி போன்ற உருவம் கொண்ட ஒரு உயிரினத்தோடு ஒப்பிட்டுள்ளனர்.
1921-ம் வருடம் லூடிணன் கொலாணல், திரு.சார்லஸ் பரி அவர்கள் எவரெஸ்ட் சிகரத்திருக்கு ஒரு ஆய்வு பயணம் மேற்கொண்ட பொழுது 21,௦௦௦ அடி உயரத்தில் உள்ள லோக்பால
என்ற இடத்தில் மனிதனை விட இரண்டு மடங்கு உயரம் கொண்ட பெரிய உருவத்தின்
காலடடி தடங்களை கண்டதாக இந்த பயணத்தை பற்றிய அவர் எழுதிய புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ளார். நேபாளத்திலத்தில் உள்ள குங்க்சன் என்ற மடாலயத்தில் YETI-யின் தலை பகுதி உள்ளது என்று கூறபடுகிறது. 1954-ம் வருடம் டாக்டர் பிஸ்வினாய் பிஸ்வாஸ் என்பவர் YETI என்ற பனி மனிதனின் தலை பகுதியை ஆய்வு செய்தார் என்றும் சொல்லபடுகிறது. மற்றும் இதற்கு சான்றாக புகைப்படங்களும் உள்ளது.
BIG FOOT, SKUNK APE, ORANG PENDEK, என்றெல்லாம் சொல்லப்படும் இந்த பனி மனிதன் பனி பிரதேசத்தில் பயணித்த பல பெண்களை கற்பளித்ததாகவும் 19-ம் நூற்றாண்டில் இருந்தே சொல்லபடுகிறது.
இந்த உலகத்தில் மொத்தம் இத்தனை உயிரினம் தான் உள்ளது என்பது மனிதனுக்கு
முழுமையாக தெரியாது. ஆகையால் இந்த உலகில் வாழும் உயிரினங்கள் பற்றிய பல
மர்மங்கள் இன்னும் விடை இல்லாமல் நிலவிகொண்டுதான் உள்ளது.
No comments:
Post a Comment