Wednesday 5 December 2018

7 வருடங்கள் சபபெட்டியில் வைத்து பாலியில் சித்ரவதை


   உலேகெங்கிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் புதிது புதிதாக நடுந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் மிருகங்களை விட இன்னும் மோசமானவனர்கள், என காட்டும் இந்த நிகழ்வுகள், அறிவியல் உலகுக்கு கூட மிகபெரிய சவுக்கு அடிதான்.


   கொளிங்ஸ்டான் என்பவர் அமெரிக்காவை தாயகமாக கொண்டவர். இவர் 1976 ம் வருடம் 2௦ வயது நிரம்பிய இளம்பெண். ஒருசமயம் கொளிங்ஸ்டான் கலிபோர்னியாவில் இருந்து தனது தோழியின் பிறந்த நாள் விழாவுக்கு, தனது வீட்டில் இருந்து கிளம்பினார். அப்பொழுது ஆலைய தொழிலாளியான ஹேமரின் ஹூக்கர், மற்றும், அவரது மனைவி டான்சி ஆகியோரால் கார் மூலம் கடத்தப்பட்டு, அவர்களின் வீட்டிற்கு கொண்டு சென்றார்கள். அங்கு சபபெட்டியில் கொளிங்ஸ்டானை தன் மனைவியின் உதவியுடன், ஹெமரின் ஹூக்கர் அடைத்து வைத்தார். அந்த சபபெட்டி அவர்களின் படுக்கைக்கு கீழேயே எப்போதும் இருக்குமாறு வைத்தனர்.


   தினமும் 23மணி நேரம்  கொளிங்ஸ்டான் இந்த சபபெட்டியில் தான் இருந்தார். ஒரு மணி நேரம் மட்டுமே வெளியே விடுவார்கள். அந்த ஒரு மணி நேரமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபடுவார். மேலும் சபபெட்டியில் இருக்கும் போதும், தனது ஆசைக்கு இணங்கவில்லை என்று ஹேமரின் ஹூக்கர், கொளிங்ஸ்டானுக்கு எலெக்ட்ரிக் சாக் தருவார். அது மட்டும் இல்லாமல் ஒரு பெரிய தடிகளை கொண்டும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இது போன்று தொடர்ந்து 7 வருடங்கள் துன்புறுத்தியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அடிமை சாசனத்தில் கையப்பம் இட சொல்லி சித்ரவதையும் செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் ஹூக்கர் கூறும் அனைத்தையும் உடனடியாக செய்யவேண்டும் என்று எழுதி இருந்தது.


   கடைசியாக கொடுமைகள் தாங்க முடியாமல் தான் எப்போவும் ஹூக்கருக்கு நல் அடிமையாக இருப்பதாக கொளிங்ஸ்டான் வாக்கு கொடுத்தார். சமையல் செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல், பாலியல் இச்சைகளுக்கு இணங்குவது என, இப்படி அனைத்தையும் தானே செய்வதாக கொளிங்ஸ்டான் மன்றாடினார்.  பிறகு அந்த வீட்டின் மிகசிறந்த வேலையாளாக மாறினார் கொளிங்ஸ்டான். மேலும் 1981ம் வருடம் தனது சொந்த வீட்டுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், உடனே திரும்பும் படி கட்டளையும் கொடுக்கப்பட்டது.


   மற்றும் 1984ல் ஒரு பணிபெண்ணாக, உள்ளூர் உணவு கூடத்திலும், ஹூக்கரின் அனுமதியுடன் கொளிங்ஸ்டான் வேலைக்கு சேர்ந்தார். அப்பொழுது தான் அவரின் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஹூக்கர் தனது மனைவியான டான்சியிடம், கொளிங்ஸ்டானை 2 வது திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் கொளிங்ஸ்டான் மூலமாக அதிகமான பாலியல் அடிமைகளை உருவாகலாம் என திட்டம் தீட்டினார். ஆனால் இதை ஏற்றுகொள்ளாத ஹூக்கரின் மனைவி ஒரு நாள் ஹூக்கருக்கு தெரியாமல் கொளிங்ஸ்டானை தப்பிக்க வழிசெய்தார்.

நிரந்தரமாக வீட்டுக்கு வந்த பின்னர், பள்ளியில் சேர்ந்து பள்ளி படிப்பையும் முடித்தார். மேலும் பட்டம் பெற்று, திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தாயும் ஆனார். பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு உதவி செயும் ஒரு அமைப்பிலும் சேர்ந்து தீவிரமாக உழைத்து வருகிறார். இந்த கொளிங்ஸ்டானின் முழு கதையும் அமெரிக்காவில் புத்தகங்களாக வெளியிடப்பட்டது. 

No comments:

Post a Comment