Sunday 16 December 2018

சிப்பிக்குள் முத்து எப்படி உருவாகுகிறது தெரியுமா?


   தங்க நகை என்ற உடன் ஒரு பெண்ணின் முகம் பொன் முகம் போல் ஆகும். அதிலும் தங்க நகைகளில் வைரம், மாணிக்கம், பவளம், முத்து உள்ளிட்ட அலங்கார பொருட்கள் பதிக்கப்பட்ட நகைகளை விரும்பாதவர்ளே இல்லை என்று கூறலாம். குறிப்பாக நெக் லெஸ், காதணிகள் உள்ளிட்ட அணிகலன்களை வாங்குவோர் முத்து பதிக்கப்பட்ட நகைகளுக்கு முதலிடம் கொடுத்து வாங்கி மகிழ்வர் ஏனெனில் பிற அலங்கார கற்கள் பதித்த நகைகளை விட முத்து பதித்த நகைகளின் விலை சற்று குறைவுதான்.


   அதே நேரத்தில் சிரிக்கும் பருவ மங்கையின் பற்களை போல, முத்துகளின் வெள்ளை நிறம் நகைகளுக்கு கூடுதல் அழகையும் பொலிவையும் கொடுக்கும். தங்க நகைகள் விரும்பாத நங்கைகள் கூட முத்துகளால் ஆன நகைகளை அணிய விரும்புவார்கள். இயற்கையான இந்த முத்துகள் கடல் வாழ் உயிரினமான சிப்பிகளில் இருந்து கிடைகிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் சிப்பிகள் அழகிய முத்துகளை ஏன் உருவாக்குகின்றன என்பது பலருக்கும் தெரியாது.


   தனது உடலுக்குள் புகுந்துவிடும் அந்நிய பொருட்களில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள சிப்பியின் உடலுக்குள் நடக்கும் ஒரு உயிரியல் செயல் முறையின் விளைவே முத்துகள் ஆகும். ப்லாம்ஷ் எனப்படும் மட்டிகள் மற்றும் மசில்ஸ் எனப்படும் கிளிஞ்சல்கள் போன்றவைகளும் முத்துகளையும் உருவாக்க கூடியவை என்றாலும் அவை மிக அரிதாக தான் முத்துகளை உற்பத்தி செய்கின்றன. ஆனால் ஓய்ஷ்டர் எனப்படும் சிப்பிகள் நன்னீர் அல்லது உப்பு நீர் என எச்சூழலிலும் முத்துகளை அதிகம் உற்பத்தி செய்கின்றன. சரி சிப்பிக்குள் முத்துகள் எப்படி உருவாகுகின்றன என்பதை அறிந்து கொள்வோமா.


   சிப்பி வளரும் போது மேண்டில் என்று அழைக்கப்படும் அதன் உள்ருப்பு ஓன்று, சிப்பி உட்கொள்ளும் உணவுகளில் உள்ள தாதுக்களை பயன்படுத்தி நாக்கேர் எனும் பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த நாக்கேர் எனும் பொருளே சிப்பியின் ஓட்டை உருவாக்க கூடிய பொருளாகும். எப்போதாவது, மணல் துகள் போன்ற அந்நிய பொருட்கள் உடலுக்குள் சென்று மேண்டில் உறுப்புக்கும் ஓட்டுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளும். இவ்வாறு சிக்கிக்கொள்ளும் அந்நிய பொருளானது, நமக்கு கண்ணில் தூசி விழுந்தால் எப்படி உறுத்துமோ, சிப்பிக்கும் ஒரு உறுத்தலை ஏற்படுத்தும். எனவே இந்த உறுத்தலில் இருந்து விடுபட,  சிப்பியின் இயற்கையான எதிர் விளைவாக உறுத்தலை தூண்டும் அந்த அந்நிய பொருளை சிப்பி ஓட்டை உருவாக்கும் நாக்கேர் என்னும் பொருள் முழுமையாக மூடிகொள்கிறது. இதன் காரணமாக சிப்பியின் ஓட்டுக்கும் மேண்டில் உறுப்புக்கும் இடையில் சிக்கி இருக்கும் மணல் துகள் உள்ளிட்ட அந்நிய பொருள் வழுவழுப்பு தன்மையை பெற்று விடுவதால், சிப்பி உறுத்தலில் இருந்து விடுபடுகிறது. இப்படி தான் சிப்பிக்குள் முத்துகள் உருவாகுகின்றன.


   நாம் நகைகளில் பாருக்கும் முத்துகள் அழகிய உருண்டை வடிவத்தில் பார்த்திருப்போம். என்றாலும் சிப்பிக்குள் இருக்கும் அனைத்து முத்துகளும் முழுமையான உருண்டை வடிவத்தில் இருப்பது இல்லை. சில முத்துகள் சீரற்று வடிவங்களிலும் உருவாகுகின்றன. சீரற்ற வடிவங்களில் உருவாகும் முத்துகளை பாரோக் முத்துகள் என்று அழைகின்றார்கள். மேலும் முத்துகள் என்றதுமே அனைவரும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும் என்று நினைகிறார்கள். ஆனால் உண்மையில் இயற்கை முத்துகள் வெள்ளை மட்டும் அன்றி பழுப்பு, சிவப்பு, நீளம், பச்சை, கருப்பு ஆகிய நிறங்களில் கூட கிடைக்கின்றன.

No comments:

Post a Comment