Monday 17 December 2018

மனிதனை போல் விவசாயம் செய்யும் இன்னொரு உயிரினம்



   டைனோசர்கள் பூமியில் இருந்து அழிந்து 6 கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்கு முன்பே பூமியில் தோன்றி இன்று வரை நம்மிடம் வாழும் உயிரினம் எறும்புகள் தான். கிட்டத்தட்ட 13 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருகின்றன. எறும்புகளில் 10,000 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. வெப்பமான பகுதிகளில் இவை கூட்டம் கூட்டமாக வாழும் தம்மை கொண்டவை. எறும்புகள் பொதுவாக 45 முதல் 60 நாட்கள் வரை உயிர் வாழக்கூடியது. இதிலும் கருப்பு பெண் எறும்பு என்ற இனவகை எறும்புகள் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்று ப்ரிடானியா ஆய்வு தெரிவிக்கின்றது.

   இதன் கால்கள் மிக மிக வலுவானவை மிக வேகமாக இயங்க கூடியவை. ஒரு மனிதன் ஓடக்கூடிய வேகத்தில் இது ஓட கூடியது. அதன் உருவத்தோடு ஒப்பிடும்போது இது அதிபயங்கரமான மின்னல் வேகம். அதே போல தனது எடையை போல் 20 மடங்கு கூடுதலான எடையை அசால்டாக தூக்கி செல்ல கூடியது. இதனோடு மனிதனை ஒப்பிடால், 50 கிலோ எடை கொண்ட ஒரு மனிதன் 1000 கிலோ எடையை தூக்கி கொண்டு ஓட வேண்டும். இது சாத்தியம் இல்லாத ஓன்று.

   எறும்புகள் 6 வண்ணங்களில் காணபடுகின்றது. பச்சை, சிவப்பு, பழுப்பு, மஞ்சள், நீளம், மற்றும் அரக்கு வண்ணங்களில் இவை இருகின்றன. எறும்புகளால் திட உணவுகளை உன்ன முடியாது. அதில் இருந்து திரவமாக பிரித்து எடுத்து தான் உட்கொள்ளும். எறும்புகளின் தலையில் காணப்படும் மீட்சிகளின் மூலமாக தான் தொடு உணர்வு மற்றும் வாசனையை உணரும். எறும்புகள் சராசரியாக இரண்டு முதல் 7 மில்லிமீட்டர் வரை வளரக்கூடியது. எறும்புகளுக்கு இரண்டு வயிர்கள் காணப்படும். ஒரு வயிற்றில் தனக்கு தேவையான உணவுகளையும், மற்றொரு வயிற்றில் பிற எறும்புகளுக்கு தேவையான உணவுகளையும் எடுத்து செல்லும்.

   பூச்சி இனங்களில் எறும்புகளுக்கு தான் அதிக மூளை உள்ளது. சில எறும்புகள் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்க கூடியவை. ராணி எறும்புகள் பிறக்கும் போது இறக்கையுடன் தான் பிறக்கும். ஆனால் அது புதிய எறும்பு கூட்டத்துக்கு தலைவி ஆகும் போது, அந்த இறக்கைகள் இல்லாமல் போகும். ஒரு எறும்பு கூட்டில் 7 லட்சம் எறும்புகள் இருக்கும்.
இந்த பூமியில் தனக்கான உணவை தானே தயார் செய்து சாபிடும் ஆற்றல் இரண்டே உயிரங்களுக்கு மட்டும் தான் உள்ளது. ஓன்று மனிதன் மற்றொன்று எறும்பு. சில சமயம் எறும்புகள் இலைகளை தூக்கிக்கொண்டு போவதை பார்த்து இருப்போம். அவைகள் LEAF CUTTER என்ற எறும்பு வகைகளை சேர்ந்தவைகள்.

   இந்த எறும்புகள் இலைகளை சின்ன சின்னதாக கத்தரித்து எடுத்து வந்து தனது கூட்டுக்குள் வைத்துவிடும். சில நாட்கள் கழித்து அந்த இலைகளில் ஒருவைகையான பூஞ்சைகள் வளரும். அவற்றை எறும்புகள் உணவாக உண்ணும். இது தான் எறும்புகள் செய்யும் விவசாயம். அந்த இலைகள் காய்ந்த பின் அவற்றை வேலைக்கார எறும்புகள் வெளியே எடுத்து போட்டுவிடும். பிறகு புதிதாக இலைகளை வெட்டி வந்து வைக்கும். அதில் வளரும் பூஞ்சைகளை தான் உண்ணும். இப்படி தனக்கு தேவையான உணவை. தானே விவசாயம் செய்து உண்ணும் உயிரினம் தான் எறும்புகள்.

No comments:

Post a Comment