Monday 11 February 2019

கீழே கிடந்த மொபைல் போன்களை எடுத்து பயன்படுத்த கூடாது ஏன்?

   பலருக்கும் சில சந்தர்பங்களில் அனாமத்தாக SMART PHONEகள் கிடைக்கும். அதாவது, யாரோ ஒருவர் தவறவிட்டு சென்ற SMART PHONE சாலையோரமாகவோ அல்லது பிற இடங்களிலோ கிடந்தால் அதை மற்றொருவர் அடித்தது யோகம் என நினைத்து யாருக்கும் தெரியாமல் எடுத்து கொண்டு வீடு வந்து சேர்ந்து விடுவார். அல்லது முன்பின் அறியாத ஒருவர் 20,000 மதிப்பு உள்ள SMART PHONE 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்றால், வாங்குபவர் விற்பவரை ஏளனமாக பார்த்துவிட்டு உடனடியாக அந்த SMART PHONE னை விலை கொடுத்து வாங்கி விடுவார். இவ்வாறான SMART PHONE கள் கிடைத்தவுடன் அனைவரும் செய்ய கூடிய ஒரே செயல் PHONE னை SWITCH OFF செய்து பழைய SIM கார்டு எடுத்துவிட்டு புதிய SIM CARD பொருத்தி கொண்டு பயன்படுத்த தொடங்குவார்கள்.

   இத்தகைய SMART PHONE களை பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்றால், அது சொந்த செலவில் நமக்கு நாமே சூனியம் வைத்து கொள்வதற்கு சமம். இன்று பெரும்பாலான குற்றவாளிகள், காவல் துறையிடம் சிக்கிக்கொள்ள SMART PHONE களே காரணமாக இருகின்றன. பழைய SIM கார்டை எடுத்து விட்டு புதிய SIM கார்டு பொருத்தி பயன்படுத்தினாலும், அந்த போனின் IMEI நம்பரை வைத்து புதிய SIM கார்டு இயங்கும் இடத்தை துல்லியமாக அடையாளம் கண்டு கொண்டு, குற்றவாளிகளை எளிதில் மடக்கி பிடித்துவிடுவார்கள் காவல் துறையினர். ஆதலால் தொழில் நுட்பம் தெரிந்த சில குற்றவாளிகள் ஒருவரை மிரட்டவோ, அல்லது சட்ட விரோத தகவல்களை பரிமாறவோ பயன்படுத்திய மொபைல் போன்களை மீண்டும் பயன்படுத்தாமல் அதனை கை விட்டு விடுகின்றனர். குறிப்பாக காவல் துறையினரின் கண்காணிப்பை திசை திருப்ப வேண்டி, மொபைல் போனை SWITCH OFF செய்யாமலேயே எதாவது ஒரு பேருந்திலோ அல்லது திரையங்கிலோ, பார்க், கடைகள் உள்ளிட்ட இடங்களில் மறந்தார் போல் வைத்து விட்டு சென்று விடுவார்கள்.

   பின்னர் அதனை எடுக்கும் நபர் அதில் இருக்கும் SIM கார்டை அகற்றி விட்டு, தனது SIM கார்டை பொருத்தி பயன்படுத்துவார். ஆனால் அந்த போனின் IMEI நம்பர் மூலமாக போன் இயங்கும் இடத்தை அறியும் காவல் துறையினர் அதனை வைத்து இருக்கும் நபரை சுற்றி வளைத்து விடுவார்கள். அதன் பிறகு நான் அவன் இல்லை எனவும், போன் என்னுடையது அல்ல என்று எவ்வளவு தான் எடுத்துரைத்தாலும் வேலைக்கு ஆகாது, தான் குற்றவாளி இல்லை என்பதை நிருபிக்க பெரும் போராட்டம் ஆகிடவும். இத்தைய SMART PHONEகளால் வேறு சில அபாயங்களும் இருகின்றன.

   அதாவது சமுக விரோதிகள் சிலர் SMART PHONEகளை வேண்டும் என்றே தவறவிட்டு செல்வர். ஏனென்றால் அதனை எடுத்து பயன்படுத்தும் நபரின் அந்தரங்கத்தை எளிதாக கண்காணிக்க முடியும். அந்த SMART PHONEல் ஏற்கனவே INSTALL செய்யப்பட்டு மறைமுகமாக இயங்கும் தவறான APPகள் மூலமாக SMART PHONEனின் முன் மற்றும் பின் பக்கம் உள்ள CAMERAகளை இயக்கி அந்நபரின் நடவடிக்கைகளையும், அவரின் அந்தரங்கத்தையும் படம் பிடிக்கவும், பதிவு செய்யவும் முடியும் அதில் சேமிக்கப்படும் போட்டோகள் மற்றும் வீடியோகளையும் திருட முடியும். மேலும் நீங்கள் பயன்படுத்தும் SMART PHONE கள் மூலம் பல்வேறு இணைய தளங்களில் நுழைய பயன்படுத்தும் USER NAME மற்றும் PASSWORD போன்றவற்றையும், உங்களது MOBILE BANKING LONGIN தகவல்கள், CRIDIT CARD உள்ளிட்ட விவரங்கள் முக்கிய தகவல்களையும் திருடிக்கொண்டு உங்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்துவார்கள்.

   இத்தைகைய அபாயங்கள் இருப்பதால் SMART PHONEனை பிறரிடம் இருந்து இரண்டாம் விற்பனை முறையில் வாங்கினாலும் கூட மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து இம்மாதிரியான முறையில் வாங்குவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். ஒரு வேலை அறிமுகமான நபர்களிடம் இருந்து வாங்கினாலும் கூட SMART PHONEனை முழுவதுமாக ஆராயுங்கள் அறிமுகம் அற்ற தேவை இல்லாத APPLICATIONகள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தால், PHONE ல் இருந்து அதை நீக்கி விடுங்கள். SMART PHONEனை ON செய்த உடன் தன்னிச்சையாக இயங்கும் APPLICATIONகளை கண்காணியுங்கள்.

   யாரவது அறிமுகம் இல்லாத நபர், உங்களிடம் அவசரமாக போன் செய்ய வேண்டும் உங்கள் போனை கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்டால், உங்கள் முன்னாள் நின்று பேச சொல்லுங்கள் மாறாக தனியாக பேச அனுமதிக்காதீர்கள். ஏனென்றால் சட்ட விரோத தகவல்கள் உங்களது போன் மூலமாக பகிரப்படலாம். அது உங்களுக்கு பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்த கூடும். அனாவசியமாக கிடக்கும் BASIC MOBILE போனாக இருந்தாலும் சரி அல்லது SMART PHONE க இருந்தாலும் சரி எடுத்து பயன்படுத்த வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு இம்மாதிரி MOBILE போன்கள் கிடைக்க பெற்றால் உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுங்கள்.

No comments:

Post a Comment