Sunday 3 March 2019

செல்பி என்ற சொல் எப்படி வந்தது என்று தெரியுமா?


    செல்போன்களில் தன்னைத் தானே "செல்பி" படம் எடுத்துக்கொள்வது இப்போது சாதரணமாகி விட்டது.. எளிதாக எடுத்து செல்லக்கூடிய "கோடாக் பிரவுனி" பெட்டிக் கேமரா அறிமுகமான போது, தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் முறை இருந்துள்ளது. அக்காலக் கட்டத்தில் பெண்மணி ஒருவர் நிலை கண்ணாடி உதவியுடன் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். 1900-ல் நடந்தது இது.
    புகைப்பட வரலாற்றில், கண்ணாடி கேமராவின் துணையுடன் ரஷ்யாவின் "அண்டாசியா திகோவ் லேவ்ன" என்பவர் தனது 13 வது வயதில் புகைப்படம் எடுத்து, அதை ஒரு கடிதத்துடன் தோழிக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் அந்த புகைப்படத்தை கண்ணாடி பார்த்துக்கொண்டு தானாகவே எடுத்ததாகவும், அவ்வாறு எடுத்த போது தனது கைகள் நடுங்கியதாகவும் கூறியுள்ளார். இது 1914-ல் நடந்தது.

   "Facebook" கலாச்சாரம் பரவுவதற்கு முன்பாகவே தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளுதல் அதிகமாக “மைஸ்பேஸ்” இணையதளத்தில் காணப்பட்டது. இது 2௦௦௦ ஆண்டுகளின் நிலைமை.

   பின்னர் பிளிக்கர் தளத்தில் புகைப்படப் பகிர்வில் "செல்பி" என்ற வார்த்தை இடம் பெற்றது. இளம்பெண்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பிளிக்கர் தளத்தில் பிரபலமாக இச்சொல் புழக்கத்தில் பரவத்தொடங்கியது. கொரியா மற்றும் ஜப்பானிய செல்போன்களை கொண்டும் இன்ஷ்டாகிராம் மூலமாகவும் எடுக்கப்பட்டு, ஐபோன் வழியாக நகலேடுக்கபட்டபோது, தானாக எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தன முதலில் இளைஞர்களிடம் பிரபலமாக இருந்த இந்த முறை, நாளடைவில் எல்லோரிடமும் பரவ தொடங்கியது.

   2012-ம் ஆண்டுக்குப் பின்னர் அதன் பயன்பாடு உச்சத்தில் வர ஆரம்பித்தது. 2013-ல் சுரேன் நியேபெர்க் விண்வெளியில் இருந்த போது "செல்பி" எடுத்துள்ளார். விண்வெளியில் இருக்கும் போது தலைமுடியை எப்படி சுத்தம் செய்து கொள்வது என்று கூட அப்போது செய்து காட்டினார். அதே ஆண்டில் நடிகை "ரிகன்னா" தன்னைத்தானே இலக்கு வைத்து எடுத்த செல்பி உலகின் மிகச்சிறந்த புகைப்படமாக கருதப்பட்டதாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட கருத்துகணிப்பின் மூலம் அறிய முடிந்தது. பின்னர் ஆக்ஸ்போர்டு அகராதிகளின் சிறந்த சொல்லாக "செல்பி" தேர்ந்தெடுக்கப்பட்டது. இச்சொல்லின் பயன்பாடு மிகவும் வியக்கதக்க வகையில் இருந்ததாக ஆக்ஸ்போர்டு அகராதி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

   2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் "நெல்சன் மண்டேலா"வுக்கு நடந்த இறுதி ஊர்வலத்தின் போது அமெரிக்க அதிபர் எடுத்து கொண்ட "செல்பி" படம் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகி "செல்பி" என்ற சொல்லையும், அதன் பயன்பாட்டையும் பரப்பியது.

No comments:

Post a Comment