Saturday 18 January 2020

கடலின் ஆழம் எவ்வளவு தெரியுமா ?

     கடலுக்கு அடியில் உள்ள நிலபரப்புகளில் இதுவரை வெறும் 5 விதமான பகுதிகள் மட்டுமே மனிதனால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஆராயப்பட்ட அந்த 5 விதமான கடலடி பகுதிகளில் மிகவும் ஆழமான பகுதியாக காணபடுவது, MARIANA TRENCH என்று கூறபடுவதுதான். இதன் கடலடி ஆழம் 10994 மீட்டர்கள், அதாவது கிட்டத்தட்ட 11 கிலோமீட்டர் ஆழம் கொண்ட இதன் அடிப்பகுதி CHALLENGER DEEP என்றும் அழைக்கபடுகிறது. மேற்கு பசுபிக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு அருகில் தான் இந்த  MARIANA TRENCH காணப்படுகிறது.


     மனிதர்கள் அனைவரும் கடலின் மேற்பரப்பில் வசிக்கும் அதேசமயத்தில் பிரமாண்டமான நீல திம்மிங்குளம் கடலுக்கு அடியில் கிட்டத்தட்ட 330 அடி ஆழம் வரை சென்று வேட்டையாட திறமை கொண்டது. இது சூரிய ஒளி  .ஊடுபடக்கூடிய, கடலின் மிகவும் ஒளியுட்டபட்ட பிரதேசம் ஆகும். அதற்கு கீழே 700 அடியளவில் அமெரிக்காவின் நீர் மூழ்கி கப்பல், உலகின் முதல் நீர் மூழ்கி கப்பலாக 1960 ஆம் ஆண்டில் உலகை சுற்றி வந்தது. இன்னும் கீழே 831 அடியழவு ஆழம் சென்றால் உலகின் மிக பெரிய ஆழம் ப்ரீ லைட் என்று அழைக்கபடுகின்ற, உபகரணங்கள் இன்றிய சுளியோட்ட பாய்ச்சல் நிகழ்த்தபட்ட ஆழமாக உள்ளது. இந்த ஆழத்தில் மனித நுரையிரல்கள் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தம் காணபடுகின்றது. ஆனால் திம்மிங்கிளத்தினால் இதையும் தாண்டி அதிகபட்சம் 1640 அடியாளம் வரை சென்று ஆக்டோபஸ் போன்ற உயிரினங்களை வேட்டையாடவள்ளது.

     2400 அடியாழத்தில், தற்போது உள்ள அணு நீர் மூழ்கி கப்பல்கள் கூட உடையும் அளவுக்கு அழுத்தம் கொண்டது. இன்னும் சற்று கீழே சென்றால் 2722 அடியாழத்தை அடைந்தாள் உலகின் மிகவும் உயரமான கட்டிடம் என்று அழைக்கப்படும் BURJ KHALIFA வின் முனையளவு உயரத்துக்கு நாம் சென்றதாகும். 3280 அடியாழத்தில் சூரிய ஒளியே உட்புக முடியாத ஆழத்தை நாம் அடைந்து விடுவோம். இந்த பகுதியை நள்ளிரவு வளையம் என்று அழைக்கபடுகிறது. இந்த இடத்தில் வசிக்கும் பெரும்பாலான உயிரினங்களுக்கு பார்க்கும் திறன் கிடையாது. உதாரணமாக 7500 அடியாழத்தில் வசிக்கும் EYELESS SHRIMP எனப்படும் பார்வையற்ற இறால் வகை உயிரினம். கடலடி எரிமலைகளுக்கு அருகில் வாழ்கிறது. இந்த ஆழத்தில் உறை நிலைக்கு அண்மையான வெப்பநிலை காணப்படும் ஆனால் எரிமலைக்கு அண்மையான நீரோட்டம் ஏறத்தாள 800 பாரன்ஹீட் வெப்பநிலையில் காணப்படும்.

     9816 அடியாழமே உலகின் மிக ஆழத்தில் நீந்திய பாலுட்டியாக பதிவு செய்யப்பட்ட CUVIER'S BEAKED WHALE எனப்படும் ஒருவகை திம்மிங்கிலத்தினால் அடையப்பட்ட அதிகூடிய ஆழமாகும். ஆனாலும் அந்த திம்மிங்ககிலத்தினால் கூட R M S டைடானிக் எனப்படும் டைட்டானிக் கப்பலை கூட கண்டுபிடிக்க முடியாது. கிட்டத்தட்ட 12500 அடியாழத்தில் அசைய முடியாமல் அப்படியே ஒய்வு எடுத்து கொண்டிருக்கிறது 1912ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைடானிக் கப்பல். இங்குள்ள அழுத்தமானது மேற்பரப்பில் உள்ள அலுத்தத்தை விட 378 மடங்கு அதிகமானது. 2௦௦௦௦ஆம் அடி ஆழத்தில் HADAL ZONE எனப்படும் MARIANA TRENCH போன்ற ஒடுங்கிய கடலடி சமுத்திரத்திற்குரிய வளையம் காணபடுகின்றது.

     முன்பே கூறியது போல 10994 மீட்டர்கள், அதாவது ஏறத்தாழ 36,070 அடியாழம் கொண்ட மரியான பள்ளதாகினுள் மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தை செலுத்தினால் அதனால்  29,029 அடியாழம் வரை செல்ல முடியும். ஆனால் அதையும் தாண்டி ஆழத்திற்கு, மனிதர்கள் சுழியோடும் கலங்களுக்கு உள்ளே அமர்ந்து சென்ற இரண்டு வரலாற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
  1. 2012ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் டீப்சீ செலேன்சேர் எனப்படும் ஒரு சுழியோடும் களத்தினுள் அமர்ந்து மரியான பள்ளத்தாக்கினுள் 35756 அடியாழம் வரை சென்று வந்தார். ஆனாலும் அதிகமான ஆழம் சென்றவர்களில் இவர் இன்னும் இரண்டாம் இடத்தில் தான் உள்ளார். 
  2. அதிக பட்சமாக மனிதர்கள் சென்ற ஆழத்தின் அளவு 35797 இந்த அளவு தான் முதலிடத்தில் உள்ளது. 1960 ஆம் ஆண்டுகளில் சமுத்திரவியலாளர்கள் ஜகுஸ் பிகான், மற்றும் லெப்டினன்ட் டோன் ஹோஸ் ஆகியோரே மரியான பள்ளத்தாக்கினுள் கடற்பரப்பில் இருந்து 35797 அடி ஆழம் வரை சென்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
எது எப்படிஇறந்தபோதிலும் சமுத்திர அடி பரப்புகளில் 5 அளவே மனிதர்களால் ஆராயப்பட்டுள்ள நிலையில், கடல் இன்னும் இருண்ட சாம்ராஜ்யத்தின் ஆரம்பபடி முறையில் தொடக்க நிலையில் மட்டுமே நாம் உள்ளோம் என்பதை உறுதியாக கூறமுடியும். 

No comments:

Post a Comment