Friday 20 March 2020

நூற்றாண்டுகளாக தொடரும் சாபம் - கொரோனா 2020


    வரலாற்றை திரும்பி பார்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்தையும், உலகப்போர், காலனி ஆதிக்கம், சர்வாதிகாரிகள், விலை ஏற்றம், மக்கள் தொகை பெருக்கம் என, அச்சுறுத்தல்கள் இந்த உலகை மிரட்டியுள்ளன. உலகையே அச்சுருத்தி மூன்றம் உலக போர் வரக்கூடும் என எதிர்பார்ப்புடன் தொடங்கிய வருடம் தான் இந்த 2020. இனி வரலாற்றை திரும்பி பார்க்கையில், இந்த 2020ஆம் வருடம், சீன மக்களை மட்டும் அல்ல, ஒட்டு மொத்த உலக மக்களையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் என்பது வருத்தமான உண்மை. 

    கண்ணுக்கு தெரிந்த எதிரிகளிடம் இருந்து தற்காத்துகொள்ள தெரிந்த நமக்கு, கண்ணுக்கு தெரியாத அரக்கர்களிடம் தோற்று தான் போகிறோம். வைரஸ், பாக்டீரியா என இரண்டும் காற்றையும், தண்ணீரையும், வாகனமாக பயன்படுத்தி நம்மை தாக்கும் இந்த அரக்கர்கள் இன்று மட்டும் அல்ல என்றுமே மனித குலத்துக்கு ஆபத்து தான். கிட்டத்தட்ட 6000 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த நுண்ணுயிர்கள் பலிவாங்கியது பல மனித உயிர்களை. உலகையே தனக்கு கீழ் கொண்டு வர நினைத்த மாவீரன் அலெக்ஸ்சாண்டர் இறந்தது வைரஸ் காச்சலால் தான். அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்த மக்களின் வரலாற்றை எகிப்த்தின் பிரமிடுகளில் காணலாம்.

    இந்த தொற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பதில் பாக்டிரியவை விட வைரஸ்கள் தான் சவாலாக உள்ளன. இன்று கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி கொண்டிருப்பதன் காரணமும் அது தான். இத்தகைய கொடூரமான வரலாறு கொண்ட வைரஸ், வரலாற்றிலும் கொடூரமான பக்கங்ககளை கொண்டுள்ளது.

    முன்னூறு வருடங்களுக்கு முன் 1720-ல் பிரான்சில் தி கிரேட் பிளேக் என்ற பாக்டீரியா தொற்றின் காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு அதில் ஒரு லட்சம் மக்கள் இறந்தனர். தண்ணீர் மூலம் பரவிய இந்த தொற்றிற்கு தீர்வு காண விஞ்ஞானிகள் திணறி போனார்கள். அதிலிருந்து அடுத்த நூறு ஆண்டுகளில் இந்திய மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் பரவியது காலரா. 1817ல் கண்டறியப்பட்ட இந்த தொற்று 1820ல் தீவிரம் அடைந்தது. கணக்கே இல்லாமல் உயிர்களை காவு வாங்கிய காலரா, 1824ல் தான் குணபடுத்தபட்டது. 

    அதிலிருந்து அடுத்த நூறு ஆண்டுகளில் முதலாம் உலக போர் முடிவடைந்த பிறகு, H1 N1 என்ற இன்புளுயன்ஸ் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1920 ஆம் ஆண்டு உச்சத்தை தொட்டது. 50 கோடி மக்கள் பாதிக்கப்பட்ட இந்த தொற்றினால் கிட்டத்தட்ட 5 கோடி மக்கள் உயிரிழந்தார்கள். இது அப்போதை உலக மக்கள் தொகையில் 3 சதவீதம். இருமல் மற்றும் காற்றின் மூலமாக பரவிய இந்த இன்புளுயன்ஸ் வைரஸ் தொற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தனது கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. அடுத்த நூறு ஆண்டுகளில் இன்று உலகம் சந்தித்து இருப்பது 2020ல் கொரோனா வைரஸ் என்னும் கொடூர அரக்கனை. 
    2019ன் இறுதியில் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டாலும், அதை யாரும் பெரியாக எடுத்துகொள்ளவில்லை. 2020 பிறந்து 10, 15 நாட்களில் கொரோனா வைரஸ் உயிர்களை பலி வாங்கியதும் உலகம் சுதாரிக்க தொடங்கியது. சீனாவின் வோஹன் மாகாண இறைச்சி மார்கெட்டில் இருந்து பரவியது என அறிவிக்கப்பட்டதும், அந்த மார்கெட் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. சுமார் 1.5 கோடி மக்கள் தொகை கொண்ட வோஹன் மாகாணத்தில் இருந்து 50 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு அந்த மாகாணம் இன்று தனிமை படுத்தப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களில் 5வது முறையாக குளோபல் வார்னிங் என்னும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 30 சதவீதம் அதிகரித்துக்கொண்டு இருக்கும் இந்த கொரோனா வைரஸ் பயத்தினால் பல நாடுகள் தங்களின் வாசலை மூடிவிட்டன. 

    பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், டெங்கு, எபோல, SWINE FLU, YELLOW FEVER என்று எண்ணிக்கையில் அடங்க, இந்த வைரஸ் தொற்று விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு பரவியுள்ளதாக அறியபடுகிறது. 2003ம் ஆண்டு சார்ஸ் வைரசால் எட்டாயிரம் பேர் பாதிக்கபட்டு 750 பேர் உயிரிழந்தனர். குரங்கிடம் இருந்து கொசுவிற்கு வந்து மனிதர்களை கொன்றது டெங்கு. னிபா வைரஸ் பன்றி பண்ணையிலிருந்து தோன்றி மனிதர்களிடம் பரவியது. வவ்வால் கடித்த பழங்களை தின்றாலும், இந்த வைரஸ் மனிதகளை தொற்றும். வவ்வாலை தின்ற பாம்பிடம் இருந்தும் மனிதர்களுக்கு பரவியதாக கருதப்படும் கொரோனா வைரஸின் மூலமும் விலங்குகள் என்று அறியமுடிகிறது. 

  உலக அளவில் இறைய்ச்சி ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் உணவாக உட்கொள்வதில் முதலாவதாக இருப்பது சீனா. இது தான் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் என்று கூறினாலும், BIO WAR ன் அடையாளம் என்று சிலர் கூறுகின்றனர். எது எப்படியானாலும், உலகம் முழுவதும் இந்த வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. H1 N1 காய்ச்சலுக்கான மருந்தையும் HIV தடுப்பு மருந்துகளையும் சேர்த்து கொடுத்து 48 மணி நேரத்தில் அதற்கான பலனையும் கண்டதாக தாய்லாந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

    விலங்குகளிடம் இருந்து சற்று பாதுகாப்பாக இருப்பது அறிவுரையாக இருப்பினும் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துகொள்வதே இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள சிறந்த வழியாகும். சரியான விகிதத்தில் அமைந்த உணவும், உறக்கமும், உடற்பயிர்ச்சியும், காய்கறிகளும், சுத்தமான வாழ்க்கை முறையும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தி எந்த வைரஸ் தொடரையும் நம்மிடம் நெருங்கவிடாமல் காக்கும் கவசம் என்பதே இயற்கை என்றுமே உணர்த்திவிடுகிறது. சுத்தம் சோறுபோடும் என்பது வெறும் வாக்கியம் அல்ல. அது வாழ்க்கை.

No comments:

Post a Comment