Sunday 22 March 2020

கொலை நடுங்க வைக்கும் ஹிட்லரின் வதைகூடம்

    யூதர்கள் இல்லாத நாடு என்பதை தாண்டி, யூதர்கள் இல்லாத உலகம் என்ற புதிய கனவு கண்டார் அடால்ப் ஹிட்லர். முதலாம் உலக போரில் வீர்களுக்கு தகவல் சொல்லும் ரன்னராக பணியாற்றிய ஹிட்லர் தனது நாட்டின் தோல்விக்கு காரணம் யூதர்கள் என்பதாலேயே அவர்கள் மீதான கோபத்தை, அந்த இனத்தை அளிப்பதன் மூலம் தீர்த்து கொண்டார். அதற்கு அவர் உருவாக்கிய இடம் தான் யூத வதை முகாம்.

    ஜேர்மானிய ஆட்சியை கைப்பற்றி அதிபரான பிறகு உலகை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு உலக நாடுகளின் மீது போர் புரிந்து கொண்டு இருந்த வேளையிலும், யூதர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கவனத்தில் கொண்டு இருந்தார். அதற்கு அவர் முதலில் கையில் எடுத்தது யூதர்களை அடையாளம் காணுதல். நாட்டில் உள்ள அனைத்து யூதர்களும், தங்களுடைய ஆடையில் மஞ்சள் நிற நட்சத்திரத்தை முத்திரையாக குத்தி கொள்ள வேண்டும். இதை மறுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை என அறிவிக்க பட்டதும், அதற்கு பயந்து அந்த முத்திரையை இட்டு கொண்டனர்.
     இப்படி முத்திரை அணிந்த மக்களை, ஜெர்மானிய மக்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு கெட்டோ எனப்படும் யூத வதை முகாம்களில் அடைக்கபடுகின்றனர். ஆனால் அந்த பகுதி தினமும் 2,000, 3,000 என யூத மக்களின் வருகையால் நிரம்பி வழிய தொடங்கியது. ஜெர்மனியின் மற்ற பகுதிகளிலும் கெட்டோவை அமைத்திட வேண்டும் என்றார் ஹிட்லர். அப்படி உருவாக்கப்பட்ட யூத வதை முகாம்களில் மிகப்பெரியது Auschwitz.

    ஜெர்மனியின் தெற்கு போலந்தில் உருவாக்கப்பட்ட Auschwitz உலக வரலாற்றில் பயங்கரமான பக்கத்தை கொண்டுள்ளது. ஜெர்மனியின் பல்வேறு இடங்களில் இருந்து கூட்ஸ் வண்டியில் நிரப்பி கொண்டு வரப்பட்ட யூதர்கள் சிலர் வரும் வழியில் உணவின்றியும் மூச்சு திணறியும் இறந்தனர். அப்படி இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு சென்றதாக தான் வரலாற்றில் வர்ணிக்கபடுகிறது. ஏனென்றால் உயுருடன் இருந்தவர்கள் அடைக்கப்பட்டது Auschwitz எனப்படும் வதை முகாம் நரகத்தில்.
     முகாமிற்கு வந்த யூதர்களின் அடையாளமாக அவர்கள் கையில் எண்கள் கொண்டு பச்சை குத்தப்பட்டது. அப்படி குத்தபடாதவர்கள் அன்றே கொல்லப்பட கூடியவர்கள். அவர்களை வைத்து ஹிட்லரின் படை அனைத்து வேலைகளையும் வாங்கியது. மொட்டை தலை, உடுத்த கிழிந்த ஆடை, பசிக்கு பத்தாத உணவு சுகாதாரமற்ற இருப்பிடம் என அணு அணுவாக அந்த மக்களை வதைத்தனர். கன்னி பெண்களை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்று விடுவதும் தினசரி நடைமுறை இருந்தது. கற்பிணி பெண்களுக்கு கரு கலைக்கப்பட்டு அவர்களும் கொல்லப்பட்டனர்.

    தினமும் வரவழைக்கப்பட்டு சித்திரவதை அனுபவிக்க தயாராகும் யூதர்களால், அந்தமுகாம் நிரம்பி வழிந்தது. அவர்களை கொத்து கொத்தாக கொன்றுவிட ஹிட்லரால், ஆணையிடபடுகிறது. அதன்படி 1941 ஆம் ஆண்டில் மட்டும் 1,10,000 யூதர்கள் சுட்டு கொல்லபட்டனர். இந்த சுட்டு கொல்லுதல் முறையானது இவர்களுக்கு சலித்தவுடன் வேறு ஏதவாது வழியில் மக்களை கொல்ல வேண்டும் என்று சிந்தித்து உருவாக்கப்பட்டது தான் Gas Chamber எனப்படும் விசவாயு அறைகள்.
     கூட்டம் கூடமாக யூதர்களை ஒரு அறைக்குள் அடைத்து அந்த அறைக்குள் விஷ வாயுக்களை செலுத்தி அனைவரும் கொன்று குவிக்கப்பட்டன. முகாம்களில் இருந்த சிறுவர்களுக்கு குறைந்த உணவே கொடுக்கப்பட்டது. குறைவான உணவு அதிகபடியான வேலை என்பதால் சிறுவர்கள் பலம் இழந்துபோனதும், அவர்களை விஷ வாயு அறைக்குள் அனுப்பி கொன்று விடுவதுமாக நாட்கள் அங்கு கழிந்தன.

    1944ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் 800 சிறுவர்கள் விஷ வாயு தாக்கி கொல்லப்பட்டனர். ஹிட்லரின் படை மொத்தமாக கொன்று குவித்த சிறுவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். 1943 ஆம் ஆண்டு யூதர்கள் இல்லாத நாட்டை உருவாக்கிவிட்டோம் என ஜெர்மனி வெளியிட்ட அறிவிப்பு, உலகத்தை நிலைகுலைய செய்தது. மொத்த ஐரோப்பாவில் மூன்றில் இரண்டு பங்கு யூதர்கள் கொல்லப்பட்டனர்.
    இரண்டாம் உலகப்போரில், அமெரிக்க மற்றும் ப்ரிடிஷில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையைவிட Auschwitz ல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். 5 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கிய இந்த பெரிய வதை முகாமில் கொல்லப்பட்ட யூதர்களின் மொத்த எண்ணிக்கை 1.1 மில்லியன். 1945 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் படை Auschwitz கைப்பற்றுகிறது. கைப்பற்றப்பட்ட முகாமில் உயுருடன் இருந்த 7,500 யூதர்கள் மீட்கப்பட்டனர். அதில் பலர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    விஷ வாயு அறைக்குள் தனது உயிரை விட்டு சாவதை விட, சுடு காட்டில் எறிவதற்கு தயாராக இருந்த 600க்கு மேற்பட்ட சடலங்களை கண்டபோது தான் அங்கு நடந்த கொடூரத்தை சோவியத் படை வீரர்கள் உணர்ந்தனர். ஹிட்லரின் தோல்வி ஒவ்வொரு முகாமில் இருந்தும் யூதர்களை காப்பாற்ற வைத்து கொண்டு இருந்தது. உலகின் மோசமான வரலாறு கொண்ட Auschwitz வதை முகாம் மீட்கபட்டு, இன்று மக்கள் பார்வையிடும் நினைவிடமாக திகழ்கிறது. வரலாற்றின் கனமான நினைவுகளை கொண்ட Auschwitz பலரின் மரண ஓலங்களை கேட்டுவிட்டு இன்று அமைதியாக உறங்கி கொண்டிருகின்றது.

No comments:

Post a Comment