Thursday 26 March 2020

பிள்ளையார் கோவிலில் தோப்புக்கரணம் இடுவது ஏன் தெறியுமா?

    தடங்கல்கள் ஒழிய கணபதி கோயிலில் வணங்கிவரம் பக்தர்களுக்கு மிகையான ஆர்வமிருந்தாலும் தோப்புக்கரணம் செய்வதில் பலரும் பின்தங்கி நிற்பதைக் காணலாம். அப்படியே தெய்தாலும் கையைப் பிணைத்து இரு காதுகளிலும் தொட்டு உடலை ஒருமுறை குலுக்கி விட்டு செல்வதை காணலாம்.

    வலது கையால் இடது காதும், இடதுகையால் வலது காதும் தொட்டு கொண்டு, இருகால்களும் பிணைத்து நின்று கொண்டு, கைமுட்டுக்கள் பலமுறை தரையில் தொட்டு கணபதியை வணங்க வேண்டும் என்பது விதி.

    வேறெந்த தெய்வ சன்னதியிலும் தோப்புக் கரணம் இடுதல் என்ற விதிமுரையில்லை. ஆனால் கணபதி சந்நிதானத்தில் இது மிக முக்கியம்.
    இடது காலின் மேல் ஊன்றி நின்று வலது கால் இடதுகாலில் முன்பக்கமாக இடதுபக்கம் கொண்டு வந்து பெரும்விரல் மட்டும் தரையில் தொட்டு நிற்கவும். இடது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து வலது காதிலும், வலது கை இடது கையின் முன் பக்கமாக இடது பக்கம் கொண்டு வந்து முன்கூறிய இரு விரல்களால் இடது காதையும் பிடிக்க வேண்டும் பின்பு குனிந்து வணங்கி நிமிர்ந்து வருவதே தோப்புக் காரணத்தின் முறை.

    பக்தரைப் பொறுத்து இது எத்தனை முறை செய்ய வண்டும் என்று முடிவு செய்யலாம். பொதுவாக மூன்று, ஐந்து, ஏழு, பன்னிரண்டு, பதினைந்து, இருபத்தொன்று, முப்பத்தி ஆறு என்று பல கணக்கில் செய்வதுண்டு.

    இவ்வாறு செய்வதில் பக்தரிடமிருந்து தடங்கல்கள் விலகிச் செல்லும் என்றே நம்பிக்கை.

    அறிவியல் சம்பந்தப்படுத்திப் பார்ப்போமானால் இதை புத்தியையுனர்த்தும் ஓர் உடற்பயிற்சியாக இதைக் காணலாம். இது இரத்தத்தை உணர்வடையச் செய்யும். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்றுஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment