Saturday, 23 May 2020

நாட்டு மாடுகளின் ரகசியங்கள்


     பண்டைய காலத்தில் காடுகளில் மேய்ந்து திருந்து இயற்கையோடு ஒன்றிணைந்து தன்னிச்சையாக வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு காட்டு விளங்கு தான் நாட்டு மாடு. நம் முன்னோர்கள் அதனிடம் பழகினார்கள் பின்பு அதை வீட்டு பிராணிகளாக வளர்க்க தொடங்கினர். அந்த நாட்டு மாட்டில் காலை மாட்டை ஏர் உழவுக்கும், ஏற்றம் இறக்கவும், வண்டி மாடாகவும், தன் வீரத்தை நிருபிக்கவும், தன் அளவுக்கு மீறி அன்பை வெளிபடுத்தவும், ஏறு தழுவுதல், மஞ்சுவிரட்டு என பல வகைகளில் பழக்கி பயன்படுத்தினர். 

     பழந்தமிழ் இலக்கியங்களிலும், சிந்து சமவெளி நாகரீகத்திலும், காலை மாடுகளை கொண்டு ஏறு தழுவுதல் நிகழ்ந்தர்கான சான்றுகள் உள்ளன. கொல்லகூடிய காளையை தழுவி அடக்குவதால் கொல்லேறு தழுவுதல் என்றும் சிறப்பித்து கூறபடுகிறது. புது டெல்லியில் தேசிய கண்காட்சியகத்தில் பாதுகாக்கபடுகின்ற சிந்து சமவெளி சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காலை உருவம், அதை அடக்க வரும் ஒரு மனிதனை அக்காளை முட்டி தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு.2000 ஆண்டு அளவிலேயே, காளைகளுக்கும் மனிதர்களுக்குமான வீரமும் மோதலும் நிருபிக்கபட்டுள்ளது. 

     பசுக்களை பற்றியும், பசுக்கள் தரும் செல்வத்தை பற்றியும் பேசும் ரிக் வேத பாடல்கள் பல இருகின்றன. பசுக்களை அடைவதற்காக மக்கள் பெரும்பாடு பட்டார்கள் என்றும் பசுக்களை அடைவதை ஒரு பெரும் பேராக கருதினார்கள் என்றும், ஒரு பசுவுக்காக வசிஸ்டரும் விஸ்வாமித்திரரும் சண்டையிட்டனர் என்றும் பல புராண கதைகள் உண்டு. ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல், என இரண்டையும் தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ் இலக்கண நூல்கள் கூறுகின்றன. வாஸ் இன்டிகேஸ் என்ற அறிவியல் பெயருடன் தனி உயிரியல் குடும்பத்தை சேர்ந்தவை இந்த நாட்டு மாடுகள். இவை முற்றிலும் நம் இந்திய திரு நாட்டிற்கு மட்டுமே உரிய இனம். இந்த இன மாடுகளுக்கு முதுகுக்கு மேல் கம்பிரமான திமிலும், வாயிலிருந்து கீழே முன்னங்கால் இணைப்பு வரை தோல் மடிப்பு மடிப்பாக தொங்கியும் காணப்படும். 

     நம் நாட்டு மாடுகள் நல்ல வெயில் அடிக்கும் மண்டலங்களில் வளர்க்கபடுவதால், இதற்கு வியர்வை சுரப்பிகள் உண்டு. மேலும் பொதுவாகவே நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளது. இவ்வகை நாட்டு மாடுகள் வெயில், மலை, பனி போன்ற பருவ சூழலுக்கு தாக்கு பிடித்து மேற்கூரையின்றி வெட்டவெளியில் வாழ்ந்து வரும் தன்மை கொண்டது. கானை நோய், குந்து காய்ச்சல் போன்றவை பெரும்பாலும் இவற்றை நெருங்குவதில்லை. அத்துடன் இந்த நாட்டு பசுக்கான தண்ணீர் தேவையும் தீவன தேவையும் குறைவுதான். இதற்கு குறைந்தபட்ச பராமரிப்பே போதுமானது. கடுமையான வறட்சி காலத்தில் மாடுகள் மேனி இளைத்து விட்டாலும் விரைவில் தேறிவிடும். இவ்வாறு எளிமையான வளர்ப்பு, அதிகமான பயன்கள் கொண்ட இந்த நாட்டு மாட்டில் இருந்து பெறப்படும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயன்களை தருகின்றன.

    நாட்டு பசு மாட்டின் சாணத்தில் கோடிக்கணக்கான நுனியிரிகள் காணபடுவதால் இந்த சாணம் மண் வளத்தை பெருக்கி உயிர் சூழலை காக்கும் என இயற்கை வேளாண் வல்லுனர்கள் கூறுகின்றனர். இது ஒரு கிருமி நாசினியாக இருப்பதால், அதிகாலையில் வீட்டு வாசலில் சாணம் கரைத்த நீரை தெளித்து மெழுகி தூய்மை செய்தார்கள். இன்று அமெரிக்க சூப்பர்மார்க்கெட்டில் 10 சாண வறட்டியை வைத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அதேபோல் பசுவின் சிறுநீரில் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதால் வீடுகளில் குருமிகள் நெருங்காமல் பாதுகாக்க அடிக்கடி பசுவின் சிறுநீர் தெளித்தார்கள் நம் முன்னோர்கள்.

      பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர், நெய்யுடன் பசுவின் சிறுநீர் சாணம் ஆகியவற்றை கலந்தே பஞ்சகவ்வியம் தயாரிக்கபடுகிறது. இந்த நாட்டு மாடுகளின் பால்களை காய்ச்சும் போதே நல்ல மனம் தெரியும் கூடுதலான அளவு வெண்ணையும் கிடைக்கும். மேலும் ருசி மிக்கதாகவும், கொழுப்பு சத்து அதிகமாகவும் கிடைக்கும். தமிழ் நாட்டில் 92 வகையான நாட்டு மாடுகள் இருந்தன. அவற்றில் காங்கேயம் மாடு, பர்கூர் செம்மரை மாடு, பால மலை மாடு, ஆலம்பாடி மாடு, பெரம்பலூர் மொட்டை மாடு, மணப்பாறை மாடு, தொண்டை பசு, பூங்கநூர் குட்டை, சாம்பல் நிற மயிலை, மரநிற செவலை என அங்கங்கே ஒருசில இடங்களில் மட்டுமே வரப்பில் உள்ளன.
     நமது முன்னோர்கள் நமக்கு பழக்கபடுத்தி தந்த செல்வத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து ஆரோக்கியத்தையும் இழந்து வருகிறோம். திமில் இருந்தால் காளை மாடு என்றும் திமில் இல்லாமல்இருந்தால் அது பசு மாடு என்று அனைவரும் நினைபதுண்டு. ஆனால் நம் நாட்டு மாடுகளில் காலைக்கும் திமில் உண்டு, பசுவுக்கும் திமில் உண்டு. நாட்டு மாடுகளில் உள்ள திமில் அமைப்பினால் சூரிய ஒளியானது நேரடியாக மாட்டின் உடலில் செல்கிறது மேலும் உடலில் உள்ள வெப்பத்தையும் திமிளால் வெளியிடுவதன் மூலம் மாடுகளின் வெப்பமும் தணியும். இதனால், நாட்டு மாட்டின் பாலானது சிறிது மஞ்சள் நிறத்தில் காணப்படும். நாட்டு மாடுகளின் பாலை அருந்துவதால், நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே நம் உடலுக்கு கிடைக்கிறது. 

     நாட்டு மாடுகள் நாள் ஒன்றுக்கு 2 லிட்டரில் இருந்து 3 லிட்டர் வரை குறைந்த அளவு பால் மட்டுமே தருபவை. நாட்டு மாடுகளின் பால் புரத சத்து மிகுந்தவை. இச்சமயத்தில் பாலின் முக்கியத்துவம் பற்றி வந்த விளம்பரங்களால் அதிக தேவை கருதி விவசாயிகள் கலப்பின பசுக்களை வளர்க்க ஆர்வம் காட்டின. கடந்த 30 வருடங்களால் தான் பாலை உணவில் கணிசமாக சேர்த்து கொண்டிருகிறார்கள். இது சாத்தியபட்டதற்கு மிகவும் முக்கிய காரணம், நாட்டு மாடுகளில் கலப்பின கொள்கை என்னும் இனவிருத்தியே ஆகும். இந்த கலப்பின கொள்கையை அமுல்படுத்தபட்ட பிறகு சீமை பொலி காளைகளின் பங்கு மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஜெர்சி இன மாடுகளுக்கு வியர்வை நாளங்களும் திமிலும் கிடையாது.  
     மாட்டின் உடலில் ஏற்படும் வெப்பம் பால் மற்றும் சிறுநீரின் மூலமாகதான் வெளியேற்றப்படும். இதனால் இந்த கலப்பின மாடுகளின் சாணமும், சிறுநீரும் மண்ணுக்கு நன்மை விளைவிப்பதில்லை. ஜெர்சி மாடுகளில் இருந்தும், கலப்பின மாடுகளில் இருந்தும் பெறப்படும் பால் A1 பால் என்றும், நம் நாட்டு மாட்டின் பால் A2 பால் என்றும் வகைபடுத்தபடுகிறது. A2 பால் மட்டுமே பயன்படுத்தி வந்த நம்மிடம், பால்கோவா, பன்னீர், சீஸ், நெய், மில்க் சேக், டீ, காபி என்று பாலின் உபயோகத்தை அதிகபடுத்தி அயல் நாட்டு மாட்டை இறக்குமதி செய்ய வைத்து நம் மாட்டோடு கலபினம் செய்து கிடைக்கும் A1 தான் இன்று நாம் தினமும் பருகி வருகிறோம் இதில் கொடுமை என்னவென்றால், அன்று பால் வாங்க பத்திரம் எடுத்து சென்றோம். இன்று பை தூக்கி சென்று பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பாலை வாங்கி பயன்படுத்துகிறோம். 

      சமிபத்தில் நடந்த ஒரு ஆய்வில், பால் பாக்கெட்டின் ஓரத்தில் வெட்டப்படும் சிறிய அளவு பிளாஸ்டிக் பைகளால் டன் கணக்கான மறுசுழற்சி செய்யமுடியாத குப்பைகளை உருவாக்கி கொண்டிருப்பதாக சொல்கிறது. நாட்டு மாடோ அல்லது கலப்பின மாடோ அது என்ன உணவு எடுத்து கொள்கின்றதோ அதை பொறுத்தே அதன் பாலின் பலனும் இருகின்றது. அன்று காடுகளில் மேய்ந்த மாடுகளால், ஆரோக்கியமான பாலை பெற்ற நாம் இன்று சாலைகளில் குப்பைகளை மேய்ந்து திரிந்து, அதை உண்டு உறங்கி வாழும் சில மாட்டின் பாலை தான் நாம் அருந்தி கொண்டிருக்கிறோம்.
       உலக அளவில் பால் உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கிறது நம் இந்தியா, இது பெருமை என்றாலும், எவ்வகையான பாலை நாம் பயன்படுத்துகிறோம் என்பதில் ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறோம். இன்று அதிக கொழுப்புள்ள பால், சிறிது கொழுப்புள்ள பால், கொழுப்பற்ற பால் என வித விதமான பெயர்களில் பால் விற்பனை செய்யபடுகின்றது. சீனாவில் உள்ள ஒரு பால் பவுடர் தயாரித்து விற்பனை செய்த பால் பவ்டரை குடிக்கும் குழைந்தைகளுக்கு சிறு வயதிலேயே மார்பகங்கள் ஏற்படுவதாக புகார்கள் வந்ததையொட்டி அதை பற்றி விசாரிக்க சீன சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. மனிதர்களை விட மாடுகள் அதிகம் இருந்த பங்களதேசில், மாடுகள் அழிந்து இன்று குழந்தை பால் பவ்டருக்கும், உரத்துக்கும், பூச்சி மருந்துக்கும், வெளி நாட்டவரை எதிர்பார்த்து இருக்கிறது.

      பிரேசிலில் நம் நாட்டு மாடுகள் லட்ச கணக்கில் வளர்க்கபடுகின்றன. கேரளாவிலும் கூட தமிழ்நாட்டு மாடுகளை கொண்டு Zero Budget Forming செய்ய கிசான் கேரளா மூலம் பயிற்சி கொடுகிறார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நாடு மாடுகளில் கிடைக்கும் பாலுகென்றே தனி சந்தையே உள்ளது. இந்திய நாட்டிற்கு விவசாயத்துக்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடு தான் முதுகெலும்பு. அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள். 


     இளைஞர்களின் வெற்றி போராட்டங்களில் ஓன்று தான் ஜல்லிக்கட்டு வெற்றி போராட்டம். இதன் மூலம் ஏறு தழுவுதல் என்பதையும் தாண்டி, நாட்டு மாட்டின் நன்மைகளையும் மக்கள் தெரிந்து கொண்டனர். நாட்டு மாட்டின் வளர்ப்பு முறையும், நாட்டு மாட்டின் பாலின் பயனையும், இனியாவது புரிந்துகொண்டு எதிர்காலம் காப்போம். நாட்டு மாடுகள் இல்லையென்றால், இயற்க்கை வேளாண்மை, சித்த ஆயுர்வேத மருத்துவம் போன்ற வார்த்தைகளுக்கு இங்கு வேலையே இல்லை.

No comments:

Post a Comment