நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த ஐம்பூதங்களையும் அடக்கிய இயற்கையை வழிபட்டவர்கள் ஆதிகால மனிதர்கள். காலபோக்கில் நமக்கும் அப்பாற்பட்ட சக்தியின் தேடலுக்கான பிடிபடாத விடையாக கடவுள் சக்தி விளங்கியது. தமிழ் மரபு இயற்கையை கடவுளின் வழியானதாக ஒன்றிணைத்து வழிபட்டு வந்தது. முன்னோர்கள் வழிபாடு முதல் ஆலய வழிபாடு வரை, சிறந்து விளங்கிய தமிழினத்தின் அறிவும், அறிவியலும், தலைமுறைகள் தாண்டி நிற்கும் அளவுக்கு ஆற்றலுடையதாகும்.
ஆரம்ப காலத்தில் நடுகல் வழிபாடாக தொடங்கிய முன்னோர்களை வழிபடும் முறை காலபோக்கில் குல தெய்வகள் வழிபாடு முறையாக வடிவெடுத்து பின்பற்றி வரபடுகிறது. பெரும்பாலான குலதெய்வங்களின் கோவில்கள் மிக பிரமாண்டமான கட்டிடங்களாக இல்லாமல், வெட்டவெளில் அமைக்கபட்டோ அல்லது சிறு கூடாரங்கள் கட்டப்பட்டு தான் வழிபட்டு வந்தார்கள். குறிப்பிட்ட குடும்பத்தினர் அல்லது ஊர்மக்கள் மட்டும் சேர்ந்து தங்களின் முன்னோர்களை வழிபட்டு வந்ததாலேயே, இந்த கோவில்கள் சிறிய அமைப்பு பெற்றிருந்தன.
ஆனால் இன்றளவும் தமிழகத்தில், மன்னார்களால் கட்டபட்டு கம்பிரமாக நிற்கும் கோவில்கள் எல்லாம், ஊர் மொத்தமும் ஓன்று கூடி வழிபடும் இடமாக இருக்கிறது. பெரிய கோவில் அமைப்புகள் எல்லாம் நம் கட்டிட கலைகளையும் பொருளாதார உச்சத்தை வெளிபடுத்தும் விதமாகவே அமைந்து வந்தது. ஆரம்ப காலகட்டத்தில் பல மர கோவில்கள் கட்டப்பட்டு இருந்தன. ஆனால் இயற்கை சீற்றங்களின் ஒன்றான நெருப்பில் கோவில்கள் சேதமடைந்து வந்த நிலையில் மர கோவில்களை தவிர்த்து கற் கோவில்களை கட்ட துவங்கினர். கற் கோவில்களின் வடிவமைப்பு மிக பிரம்மாண்டமான முறையில் இருந்தது.
உயரமான கோபுரங்கள் பெருவாரியாக சேமிப்பு முறையின் நோக்கமாகவே இருந்து வந்தது. ஊரில் வெள்ளம் தோன்றி ஏதேனும் அழிவு நேர்ந்தால் பயிர்கள், தானியங்கள் என அனைத்தும் அழிந்துவிட நேரிடும். இதன் விதைகளை சேமிக்கும் வகையில் உயரமான கோபுரங்கள் மேல் கலசங்களை பொருத்தி அதனுள் இந்த விதைகளை சேமித்து வைத்தார்கள். அதாவது நீர் போன்ற அழிவுகள் ஏதம் தொடமுடியாத உயரத்தில் கட்டமைக்கப்பட்டன. இன்றைய நாளில் கும்பாபிஷேகம் என சொல்லப்படும் முறைக்கு மூலதனமே இந்த கலச முறை வழிபாடு தான்.
இந்த முறை சங்க இலக்கிய காலத்தின் முதலே தமிழ் மரபில் உள்ளது. இதை சங்க இலக்கியங்கள் குட நீராட்டு எனவும், நீர் தெளி எனவும் குறிபிடுகிறது. சிலபதிகாரத்தில் கண்ணகிக்கு எழுப்பப்படும் கோவிலுக்கு குட நீராட்டு நடந்ததாக கூறபடுகிறது. 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மதுரை யானை மலை பெருமாள் கோவிலின் கல்வெட்டு ஓன்று இதை நீர் தெளி எனவும் குறிபிடுகிறது. இந்த குட நீரானது, திருகாவனம் எனப்படும் யாக சாலை அமைத்து ஐம்பூதங்களையும் வழிபட்டு மனதை ஒருநிலை படுத்தும் சொற்களான, மனதில் திடமாக இருக்கும் மந்திரம் முழங்கி கடவுளுக்கான திருப்பாடல் பாடி, அதை கடவுள் மங்களம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, இய்யம் போன்ற ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டது தான் இந்த கலசங்கள். உருண்டை வடிவிலான பகுதியின் மேல் ஒரு கூம்பு வடிவிலான இருப்பது தான் கலசம். இந்த உருண்டை வடிவிலான பகுதியில் தான் தானியங்கள் அனைத்தும் கொட்டிவைக்கபட்டு சேமித்து வைக்கப்பட்டன. ஒரு தானியம் 12 ஆண்டுகள் வரை 100 சதவீதம் விளையும் தன்மையுடன் இருக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குட நீராட்டு நடத்த வேண்டும் என்ற விதிமுறையும் இதன் அடிபடையிலேயே கடைபிடிக்கபட்டது. நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்கா சோளம், சாமை, எல், போன்ற நவ தானியங்கள் தான் கலசத்தில் கொட்டி வைக்கபடுகிறது.
கூம்பு வடிவில் இருக்கும் பகுதி மின்னலை தாங்கி கடத்துவதற்காக அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பலங்காலங்களில் ஐம்பொன்களுடன் சேர்ந்து இர்டியம் கலந்த உலோகத்திலேயே கலசங்கள் பெரும்பாலும் உருவாக்கப்பட்டு இருந்தது. பிளாடினம் குடும்ப வகையை சேர்ந்த இந்த இர்டியம் 2000 செல்சியஸ் வெப்பத்தை கூட தாங்கும் அளவு சக்தி கொண்டது. இந்த வடிவில் அமைக்கப்பட்ட கலசமானது கோபுரங்களை மின்னல் மற்றும் இடிகளில் இருந்து சிதையாமல் தடுக்கும் வகையில் கட்டப்பட்டது. அதனால் தான் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் எழுப்பி, அதன் மேல் கலசங்கள் பொருத்தி, குறிப்பிட்ட பரப்பளவில் இடி மற்றும் மின்னல்களின் இருந்து ஊரை காக்க உருவாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
ஊரில் கோவில் கோபுரங்களை விட பெரிய கட்டிடங்கள் இருக்க கூடாது என்று சொன்னதற்கு அடிப்படை காரணமும் இது தான். கோவில் கோபுரங்களின் உயரத்திற்கும் அகலத்திற்கும் ஏற்றார் போல் கலசங்களின் எண்ணிக்கையும் கூடும். கோவில்களும், கோபுரங்களும், கலசங்களும், இனத்தின் கலை நயத்தை பறைசாற்றும் விதமாகவும் மற்றும் மக்களின் நலனுக்காவும் உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் தமிழன் படைத்த பிரம்மாண்டங்களின் ஆற்றல் ஆகும்.
No comments:
Post a Comment