நிலத்தில் வாழும் மிகப்பெரிய விளங்கு யானை தான். அதிலும் ஆப்பிரிக்க
யானைகளோ ஆசிய யானைகளை விட பெரிய தாகும். இந்த யானை 4.5 மீட்டர் உயரம் வளரும். 3,632 k.g எடை இருக்கும். ஒரு
நாளைக்கு 272 k.g உணவும், 227 லிட்டர் தண்ணீரும் குடிக்கும்.
பெண் யானை, கருத்தரித்த 22 மாதங்கள் கழித்து
குட்டி போடும். காட்டு யானைகள் மார்ச் முதல் மே மாதம் வரைதான் குட்டி போடுகின்றன.
யானைகள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. ஒரு கட்டத்தில் 30 முதல் 50 யானைகள் வரை
இருக்கும். அதற்கு ஒரு தலைமை யானையும் உண்டு. யனைகுட்டிகள் 5 ஆண்டுகள் வரை தாயின்
பாலை குடித்தே வளர்கின்றன. குட்டி, தாயை விட்டு பிரிவதேயில்லை. தனது வாயாலேயே பால் குடிக்கும்.
துதிக்கையால் அல்ல. தாய் என்று இல்லை. எந்த பெண் யானை பால் கொடுத்தாலும் குட்டி
அந்த பாலை குடிக்கும்.
பிறக்கும் போது குட்டி யானை 90 முதல் 135 கிலோ எடை வரை
இருக்கும். யானை எப்போதும் ஒரே பாதையில்தான் போய் வரும். யானைகள் 90 முதல் 200 ஆண்டுகள் வரை உயிர்
வாழும் தன்மை உடையது. சில யானைகளின் தந்தங்கள் 90 கிலோ வரை எடையும். 5 மீட்டர் நீளமும் இருக்கும். யானைகள் நீரில் நாற்றாக நீந்த கூடியது. 4.5 மீட்டர் ஆழத்தில் மூழ்கிச்செல்லும். மனிதன் எந்த அளவுக்கு நீருக்கு
அடியில் மூச்சை அடக்கி இருக்க முடியுமோ அந்த அளவு மட்டுமே யானையாளும் நீருக்கு
அடியில் இருக்க முடியும்.
யானைகள் சுவாசிப்பது துதிக்கையினால்தான்
என்றாலும் வாசனை அறிவது மட்டும் வாயில்தான். யானைக்கு வாயில்தான் வாசனை நரம்புகள்
இருக்கின்றன. துதிக்கையினால் பெரிய மரத்தையும் சாய்த்து விடும். காட்டு யானைகள்
ஒன்றுடன் ஓன்று சண்டை போடுவது வேடிக்கையான ஓன்று. சண்டையின்போது களைப்பாக
இருந்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளும். சிறிது நேரம் உணவு எடுத்து கொள்ளும்.
தண்ணீர் குடிக்கும். மறுபடியும் சண்டை போடும். இப்படியாக பல நாட்கள் சண்டை
நீடிக்கும்.
யானை, மணிக்கு 32 கிலோ மீட்டர்
வேகத்தில் ஒட கூடியது. எல்லா யானைகளுக்குமே கிட்டப்பார்வை உண்டு. தூரத்தில் இருப்பதை
அவற்றால் தெளிவாக பார்க்க முடியாது. யானைக்கு வெள்ளை நிறம் சுத்தமாக பிடிக்காது.
யானை, பன்றி இனத்தை சேர்ந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். முதலில்
தோன்றிய யானை பன்றி அளவே இருந்ததாம். ஆரம்பத்தில் நீண்ட மூக்காக இருந்து பின்பு
துதிக்கையாக வளர்ந்ததாம். யானையின் துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் அது கட்டுக்கடங்காமல்
போய்விடும். 150 ஆண்டுகளுக்கு முன்பு
வரை அமெரிக்கர்கள் யானையை நேரில் பார்த்தது கிடையாது என்பது தான் உண்மை.
No comments:
Post a Comment