Monday 23 November 2020

ஜாதிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள்

     ஜாதிகாயில் இருந்து பெறப்படும் "மேசின்" என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்புளிக்கும் தைலங்களில் பயன்படுத்தபடுகின்றன. ஜாதிக்காய் எண்ணையில் அடங்கியுள்ள "மிரிஸ்டிசின்" என்ற வேதிப்பொருள் பலவிதமான நோய்களை குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தபடுகின்றன. ஜாதிகாயில் இருந்து பிரித்து எடுக்கப்படும் "ஒலியோரேசின்" கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம், மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டிரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

     ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேலையாக சாபிட்டு வர வயிற்று போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இறப்பை, ஈரல் ஆகியவற்றை பலபடுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம், ஓக்காளம் ஆகியவற்றை போக்கும். சிறு அளவில் உண்டுவரச் செரிமானதிறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

     எண்ணையில் இட்டு காய்ச்சி இந்த எண்ணையை இரண்டு துளி காதுக்கு விட்டால், காது வலி தீரும். 10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிகாய்ச் சாறு ஒரு மேசை கரண்டியளவு கலந்து சாபிட்டால், அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆகியவை குணமாகும். ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைபலத்துடன் கலந்து சாப்பிட அஜிரனத்தினால் ஏற்பட்ட வயிற்று போக்கு தீர்ந்துவிடும். 

     ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். ஜாதிகாயை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது அவைக் போதையை உண்டாக்கும்.

   மொலுக்கஸ் தீவில் தோன்றிய ஜாதிக்காய் இந்தியாவிலும் அறிமுகபடுத்தபட்டது. கேரள, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யபடுகிறது. ஆண்டுதோறும் ஆயிரம் டன்ங்கள் விளைவிக்கபடுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமாக பயிரிடபடுகிறது. 

     ஜாதிக்காய் ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டல பகுதிகளான தென்மேற்கு மலை ஓரங்களில் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் பயிர் செய்யபடுகிறது. இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மண் உகந்தது. மண்ணில் அங்ககப் பொருட்கள் அதிகமாக இருப்பது மிகவும் அவசியம். இது அடர்த்தியாக வளரக்கூடிய பசுமை மாறா மரம்.இவை சுமார் 10-20 மீட்டர் உயரம் வளரக்கூடிய பளபளப்பான இலைகளையுடையவை. இவற்றின் பூக்கள் இளம் மஞ்சள் நிறத்தில் மிகச் சிறியதாக காணப்படும். ஜாதிகாயில் ஆண் மரம், பெண் மரம் என தனித்தனியாக காணப்படும். இதை 6 வருடம் கழித்து அவை பூக்கும் போது தான் தெரியும்.

No comments:

Post a Comment