Tuesday 13 July 2021

இந்தியாவில் வரதட்சணை பெறப்பட்ட மொத்த பணம் எவ்வளவு தெரியுமா?


      இந்தியாவில் ஊரக பகுதிகளில் கடந்த சில 10 ஆண்டுகளாக வரதட்சணை முறை மாறாமல் அப்படியே இருப்பதாக உலக வங்கி நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 1960 முதல் 2008 வரையில் நடந்த 40,000 திருமணங்களை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவுக்கு வந்திருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 1961 முதல் நடந்த 95% திருமணங்களில் வரதட்சணை வழங்கப்பட்டுள்ளது என்றும் சட்டவிரோத திருமணங்கள் கூட இதில் அடக்கம் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பரவலாக சமூக தீங்கு என்று விமர்சிக்கப்படும் இந்த நடைமுறை பெண்களை குடும்ப வன்முறைக்கும் சில நேரங்களில் மரணத்துக்கும் இலக்காகிறது. 

     வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தெற்காசியாவில் பல நூற்றாண்டுகளாக உள்ள ஒரு பழக்கம் ஆகும். இந்த ஆய்வு எப்படி நடந்தது என்றால், இந்திய மக்கள் தொகையில் 96% கொண்டு இருக்கிற 17 இந்திய மாநிலங்களில் இருந்து திரட்டப்பட்ட வரதட்சனைகளை பற்றிய தரவுகளை அடிப்படியாக வைத்து, இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இன்னும் ஊரக பகுதிகளிலையே வாழ்வதால், இந்த ஆய்வு இந்தியாவின் ஊரக பகுதியின் கவனம் செலுத்தி செய்யப்பட்டுள்ளது. திருமணத்தின் போது தரப்பட்ட மற்றும் பெறப்பட்ட பணம், பொருட்கள் உள்ளிட்ட வரதட்சணையின் மதிப்பு குறித்த தகவல்களையும் பொருளியல் வல்லுனர்கள் S.அனுகுருதி, நிதிஸ் பிரகாஸ், மற்றும் சுங்கோ கவுன் ஆகியோர், இந்த ஆய்வுக்காக பயன்படுத்தி கொண்டனர். 


 

     மணமகள் வீட்டார், மணமகன் வீட்டாருக்கு கொடுத்த சீர்வரிசைக்கும், மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கு கொடுத்த சீர்வரிசைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஆய்வாளர்கள் நிகர வரதட்சணை என கணிகின்ற்றனர். மிக குறைவான திருமணங்களில் தான் மணமகள் வீட்டார் கொடுத்ததை விட மணமகன் வீட்டார் கொடுத்த சீர்வரிசையின் மதிப்பு அதிகமாக இருந்தது. காலந்தோறும் நிகர வரதட்சணை நிலையாக இருப்பதையும் 1975க்கு முன்பும் 2000க்கு பிறகும் அந்த நிகர வரதட்சணையில் கொஞ்சம் வீக்கம் இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். சரி யார் தரும் சீர் வரிசை அதிகம், மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கு சராசரியாக உண்மை மதிப்பில் ரூபாய் 5000 பெருமதியுள்ள சீர்வரிசை தந்துள்ளதையும் அதே நேரம் மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்கு உண்மை மதிப்பில் சராசரியாக 32000 மதிப்புள்ள சீர்வரிசை தந்துள்ளதையும், ஆய்வாளர்கள் கணகிட்டு தந்துள்ளனர்.

     இதனால் சராசரி நிகர வரதட்சணை ரூபாய் 27000 என்றாகிறது. குடும்ப வருமானம் மற்றும் சேமிப்பில் கணிசமான பகுதியை வரதட்சணை எடுத்துகொள்கிறது. ஊரக பகுதிகளில் 2007ல் சரசாரி நிகர வரதட்சணை என்பது குடும்பத்தின் ஆண்டு வருமானத்தின் 14 சதவீதத்தை செலவழிப்பதாக இருந்தது. வருமானத்தில் வரதட்சணைக்கு எத்தனை சதவீதம் செலவிடபடுகிறது என்ற கணக்கு காலபோக்கில் குறைந்துவிட்டது. இந்தியாவின் ஊராக பகுதிகளில் ஆண்டு வருமானம் உயர்ந்துவிட்டதே இதற்கு காரணம் என்கிறார் உலகவங்கி குழுவை சேர்ந்த Dr.அணுகுருதி. ஆனால் குடும்ப வருமானத்தில் எவ்வளவு பெரிய பங்கினை எடுத்து கொள்கிறது என்பதை காட்டுவதற்காக சராசரி கணக்கீடு தான் இது.

     குடும்ப வருமானம் செலவு தொடர்புடைய தரவுகள் நமக்கு தேவை, ஆனால் துருதுஷ்ட வசமாக அதுபோன்ற தரவுகள் நமக்கு கிடைபதில்லை என்கிறார் அவர். 2008க்கு பிறகு இந்தியாவில் ஏராளமான விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால் திருமண சந்தையிலோ, சட்டத்திலோ ஆண்களையும், பெண்களையும் கொண்ட மனித முதலீட்டிலோ, பெண்களின் உழைப்பு சந்தை விளைவுகளிலோ, கட்டமைப்பு சார்ந்த திடீர் மாற்றங்கள் நடக்கவில்லை. இதனால் வரதட்சணை பரிமாற்றத்திலோ வடிவத்திலோ குறிபட தகுந்த மாற்றங்கள் எதுவும் நடந்துவிடவில்லை என்கிறது இந்த ஆய்வு. 

     இந்தியாவில் உள்ள நான்கு மதங்களிலும் இந்த வரதட்சணை வாங்கும் பழக்கம் உள்ளதாக இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிறிஸ்துவ மற்றும் சீக்கிய மதங்களில் வரதட்சணை பரிமாற்றம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. இதனால் அவர்களின் மதங்களில்  பரிமாறப்படும் வரதட்சணையின் சராசரி அளவு, இந்து முஸ்லிம் மதங்களில் இருபதைவிட அதிகமாக இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே வரதட்சணை அளவில் குறிபிடத்தக்க வேறுபாடு இருப்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துரிப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். 


      1970களில் இருந்து கேரளாவில் தொடர்ந்து தெளிவாக வரதட்சணை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. ஹரியானா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களிலும், சரசாரியாக வரதட்சணை அதிகரித்து வருகிறது. ஒரிசா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சராசரி வரதட்சணை குறைந்துள்ளது. இந்த வேறுபாடுகள் ஏன் நிகழ்கின்றன என்பதற்கு உறுதியான பதிகள் இல்லை. எதிர்காலத்தில் இந்த கேள்விக்கான பதிகளை காண முயல்வோம் என்கிறார் அனுகுருதி. கால ஓட்டத்தில் வரதட்சணை முறை எப்படி உருவானது என்பது குறித்து கவுரவ் ஸ்லுங்கர், ஜெப்ரி ஆகியோர் மேற்கொண்ட ஒரு ஆய்வின் முடிவு கடந்த ஜனவரில் வெளியானது. 

     கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் நடந்த 74000 திருமணங்கள் குறித்த தரவுகளை பயன்படுத்தி அவர்கள் இருவரும் இந்த ஆய்வை நடத்தினர். இந்தியாவில் வரதட்சணை தந்தோ அல்லது பெற்றோ கொள்கின்ற திருமணங்களின் எண்ணிக்கை 1930க்கும் 1975க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு மடங்கானது. இதே காலகட்டத்தில் தந்து பெற்று கொள்கிற வரதட்சணையின் சராசரி உண்மை மதிப்பு 3 மடங்கு ஆனது. ஆனால் 1975க்கு பிறகு நடந்த திருமணங்களில் சராசரி வரதட்சணையின் அளவு குறைய தொடங்கியுள்ளது. 1950 முதல் 1999  வரையிலான காலகட்டத்தில் தரப்பட்ட மற்றும் பெறப்பட்ட வரதட்சணையின் மொத்த மதிப்பு தோரயிரமாக 25,000 கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும் என இந்த ஆய்வாளர்கள் மதிபிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment