Wednesday 27 May 2015

நினைவாற்றலை பெருக்கும் மாதுளை


      மாதுளை ஜூசை தொடர்ந்து 4௦ நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல.. ரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் அளவு அதிகரித்து. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

  1. கடுமையான சீதபெதியால் அவதிப்படுகிறவர்களுக்குஅருமருந்து மாதுளைதான், மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு. இதில் ஆதாவது ஒன்றை மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். எதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  2. மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாரை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.
  3. கல்கண்டு, பனீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும்.
  4. மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.


No comments:

Post a Comment